பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் இன்னோர் உண்மை-விளக்கம்: பெத்தநிலையில் உள்ளோர்க்குப் பிறப்பு நீங்காது; முத்திநிலையில் உள்ளோர்க் குப் பிறப்பு இல்லை-என்பதை நாம் அறிவோம். இதனால் மால், அயன், இந்திரன் முதலிய தேவர்கட்குப் பிறப்பு நீங்கிற்றிலது என்பது அனைவர்க்கும் உடன்பாடு” என்பது அறியப்படும். இடைநிலையில் உள்ள உருத்திரருக்குப் பிறவிசிறுபான்மை நிகழினும் நிகழும். எடுத்துக்காட்டாக ஆலால சுந்தரருக்கும், அநிந்திதை, கமலினி என்பார்க்கும் பிறப்பு நிகழ்ந்தமையைக் கூறலாம்" முருகக் கடவுள் உருத்திர சன்மராய் வந்தமை கூறும் ஒரு வரலாறு பற்றியே அக்கட வுளை உருத்திரராகக் கருதுவோரும் உளர். அங்ங்னமே ஆனைமுகத்தோனையும் உருத்திரராகக் கருதுவோரும் உண்டு. ஆயினும் அவர்கள் பிறப்பெய்தினமைக்கு நூல்களில் ஆதாரம் இல்லை. ஆகவே அவர்களைச் 'சிவர்-அபரமுத் தர் என்றலே பொருந்தும் என்பதை ஈண்டு அறிந்து தெளிய வேண்டும். 73. வைணவர்க்கு இஃது உடன்பாடல்ல. அவர்கள் திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொள்பவர்கள். இன்றுள்ள பெரும்பாலான வைணவர் சைவர்கட்குச் சமயப் பொறை இல்லை. அவரவர்கள் தத்தம் சமயத்தைப் பற்றியும் சமயக் கடவுளர் களைப் பேசுவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். பிற சமயக் கடவுளரை எதற்கும் இழுத்துக் கொண்டு பேசலா காது. இளைஞர் சமுதாயம் இதனை மேற்கொண்டால் சமயப் பொறை பெருவழக்காக அமைந்து விடும். எல்லாச் சமய உண்மைகளையும் விருப்பு வெறுப்பின்றிக் கற்க வேண்டும் என்ற உந்தல் இருப்பின் காழ்ப்புணர்வே ஏற்பட வழி இல்லை. - 74. நம்பியருரர் வரலாற்றை நோக்கி இதன் விவரத்தை அறியலாம். தம்பிரான் தோழர் என்ற எனது நூல் ஓரளவு துணையாக இருக்கும்.