பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) 97 (2) சிவன்-சக்தி ஒன்றா? வேறா? விளக்கம். சம்பு பட்ச அனுபட்ச விளக்கங்களாலும் பிறவற்றாலும், இறைவன் தனது செயல்களைத் தனது சக்தியினாலேயே நடத்துகின்றான் என்பதை உணர்ந்தோம். எனினும் இறை வனும் அவன் சக்தியும் ஒன்றா? அல்லது வேறா? என்று எழுகின்ற ஐயத்தையும் தெளிவிப்போம். முதல்வனும் அவனது சக்தியும் வேறல்ல, ஒன்றே. பொருள் என்ற சொல் இரண்டு பொருள்களைத் தரும். சொல்லால் குறிக்கப்பெறுவன எல்லாம் பொருள் என்பது ஒன்று. இதுவே பொருள் என்ற சொல்லின் நேர்பொருளா கும். பல பெற்றிகளுக்குச் (தன்மைகளுக்குச் சார்பாய் நிற்கும் பொருள் என்பது மற்றொன்று. இதுபலவற்றிற்கும் பொதுவாக நிற்கும் ஒருபெயரை, அவற்றுள் தலைமையுடைய ஒன்றனை மட்டும் குறிப்பதாகக் கொள்ளப்படும் முறையில் வரும் பொருளாகும். பல பெற்றிகட்குச் சார்பாய் நிற்கும் பொருள், குணத்தை நோக்கிக் குணி என்றும், அவயவத்தை நோக்கி அவயவி என்றும், உடைமையை நோக்கி உடையது” என்றும் இங்ங்னம் பலவாறாகக் கூறப்படும். இதற்கு அமைந்த நேர் சொல் முதல் என்பது. எனினும், பொருள் என்பது முதல் என்னும் கருத்திலேயே பெரும்பாலும் வழக்கின்கண் உள்ளது. ஏனையவை குணம் அல்லது பண்பு, அவயவம் அல்லது சினை-உறுப்பு உடைமை முதலிய சொற்களால் வழங்கப் பெறுகின்றன. முதல் என்பதனை வடநூலார் 'திரவியம்’ என்று வழங்குவர். திரவியமோ தமிழில் பொருள் என்றே வழங்குகின்றது. தமிழில் பெயர் என்பது முதல்’ என்பதனையே குறித்து பின்பு அது முதலினைக் குறிக்கும் சொல்லுக்கு ஆயிற்று. பின்பு இலக்கணத்தில் பெயரோடு ஒப்ப வேற்றுமையை ஏற்பன எல்லாம் பெயர்