பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் எனப்பட்டன. இதனை, பெயரிற் றோன்றும் பாலறி கிளவி யும்” என்னும் தொடராலும் அதன் உரைகளாலும் அறிய லாகும். இம்முறையில் நோக்கினால் சிவமும் சக்தியும் வேறு வேறு பொருள்களல்ல; அஃதாவது இரண்டும் இரண்டு முதல்கள் அல்ல; சக்தி குணமும், சிவன் அதனையுடைய குணியுமாகும். எனவே, சிவம் முதலாகின்றது, சக்தி அதன் தன்மையாகின்றது; இதனால் முதல் இன்றி அதன் பெற்றி இல்லை; பெற்றி இன்றி முதல் இல்லை என்பது தெளிவாகின் றது. ஆகவே சிவமும் சக்தியும் ஒருவாற்றான் இரண்டாகப் புலப்பட்டாலும் உண்மையில் அவை இரண்டும் ஒன்றே யாகும். சிவம் இன்றிச் சக்தி இல்லை. சக்தியின்றிச் சிவமும் இல்லை, சிவமேசக்தி, சக்தியே சிவம். சிவஞான சித்தியாரும், அருளது சக்தியாகும் அரன்றனக் கருளை யின்றித் தெருள்சிவம் இல்லை; அந்தச் சிவம்அன்றிச் சக்தி இல்லை? என்று இதனைத் தெளிவாக்குவதைக் காணலாம். இக்கால அறிவியல் மேதை ஐன்ஸ்டைன் என்பார். தந்துள்ள, E = m. c 2 என்னும் மந்திரமும் (E-ஆற்றல், m-பொருண்மை; c-ஒளி வேகம்) அம்மையப்பர் நிலையிலுள்ள இரகசியத்தை - அணுவின் அற்புத அமைப்பை - விளக்குகின்றது. சடமே சக்தி (Mass is Energy என்று அம்மந்திரம் கூறுகின்றது. 76. தொல். சொல். கிளவியாக்கம் - 11 77. சித்தியார் . 5.9