பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 1 (பதி) 103 இது காறும் (1) முதல் (12) தலைப்புகளில் இறைவனது பொதுஇயல்புகளைக் தடத்த இலக்கணம்) கண்டோம். இனி அவனது உண்மை இயல்பு (சொரூப இலக்கணம்)களைக் காண்போம். (3) பதியை அறியும் முறை இறைவன் ஐந்தொழில்களைப் புரியாமல் வாளா இருக்கும்போது வடிவு பெயர் முதலியன ஒன்றும் இன்றி எல்லையற்ற பொருளாக நிற்பன். இதுவே அவனது சொரூப நிலை; உண்மை இயல்பு. இறைவன் உயிர்களால் அறியப்படுபவனும் அல்லன், அறியப்படாதவனும் அல்லன், இவ்விரண்டு பண்புகளும் அவனிடம் பொருந்தியுள்ளன. உயிர்களால் அறியப்படாதவன் இறைவன் என்பதற்கு ஏனைய பசு பாசங்களை அறியும் முறையில் அறியப்படாதவன் என்பது பொருளாகும். 'அறியப் படுபவன் என்பதற்கு வேறு முறையில் அறியப்படுபவன் என்பது பொருளாகும். "அருவம், உருவம் அருவுருவம்' என்று மூவகையாகக் கூறிய பொருள்கள் யாவும் பாசப் பொருள்கள். இவற்றை உயிர் கண் முதலிய புறக் கருவி களையும் மனம் முதலிய அகக் கருவிகளையும் வாயிலாகக் கொண்டு அறியும். அங்ங்னம் அறியுமிடத்து உயிர் தன் உண்மைநிலையை அறியாமல், தனக்கு வேறாய அப்பொருள் களே தான் என்று மயங்கி அறியும் இவ்வறிவு பாச அறிவு அல்லது பாச ஞானம் என்று வழங்கப் பெறும். சுட்டறிவு' எனப்படுவதும் இதுவேயாகும். அறிதற் கருவிகளாகிய பொறிகளும், அவற்றால் அறியப்படும் பொருள்களாகிய புலன்களும் ஆகிய அனைத்தும் பாசமேயாதலின், பாசத்தைப்