பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) 105 o கம் நல்லதோர் எடுத்துக்காட்டு. இதிலுள்ள இப்படியன்... காட்டொணாதே என்ற பகுதி இறைவன் பாசஞான பசு ஞானங்கட்கு அகப்படாதவன் என்பதே கருத்தாதலைக் கண்டு தெளியலாம். மேலும், உயிர்கள் பெரும்பான்மையும் அறிவது பாசங் களையே. அப்பாசங்கள் அருவம், உருவம், அருவுருவம்' என்னும் மூன்று கூறுகளையுடையன. இக்கூறுகளில் ஒன்றிலும் இறைவனது தன்மை அகப்படாது. இதனை வியந்தே, 'எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ’ என்ற ஞானசம்பந்தப் பெருமானின் திருமொழியும் எழுந்தது. இவ்வெடுத்துக்காட்டுகளால் இறைவனைச் 'சொல்லொணாத பொருள் என்றோ, 'ஐயத்திற்குரிய பொருள் என்றோ கருதி மயங்குதல் கூடாது என்பதையும் அறிந்து தெளியலாம். இறைவன் மனவாக்குகளைக் கடந்தவன்” என்று கூறுவதிலும் உண்மைப் பொருள் உண்டு. மனம் என்பது பசு ஞானத்தையும் வாக்கு என்பது பாசஞானத்தையும் குறிக்கும் என்பது உணரப்படும். இந்த இரண்டுவித ஞானங்களாலும் இறைவனது சொரூப நிலையை அறிய இயலாது. ஆகவே, இறைவன் இவ்வகை யில் அறியக் கூடாதவனாகின்றான். இங்ங்னம் எவ்வகையிலும் எவரும் எப்பொழுதும் அறியாத பொருள் ஒன்று உள்ளது என்று கூறினால் அஃது உள்ளது எனக் கோடலே ஐயப் பாடாய் விடும். அதனால் பயன் விளைதலும் இயலாது. எடுத்துக் காட்டாக ஆமை மயிராலான கம்பளியும், ஆகாயப் பூவாலான மாலையும் உள்ளன எனக் கூறின், அவற்றை யாவரே அறியவல்லார்? அறிந்து பயன் கொள்வோர் யாவர்? 88. சம்ப. தேவா. 3.54:3