பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள்_1 (பதி) - 107 புலப்பட்ட அப்பதி ஞானத்தை விடாது பற்றி நின்று, முன் கண்டு கழித்த பாச ஞானத்தில் செல்லாது நின்றால், அப்பதி ஞானத்திற்குப் பதிப்பொருள் இனிது விளங்குவதாகும். பதிஞானத்தால் இறைவனை அறிவதையே சைவசமயாசாரி யார்கள். அருட்கண்ணால் காணுதல் என்ற கூறுவார்கள். மேலே குறிப்பிட்ட அப்பரடிகளின் திருத்தாண்டகத்தில் (6.97:10) காட்டொணாதே’ என்று கூறப்பட்டதாயினும், “அவன் அருளே கண்ணாகக் கானின் அல்லால்” என்ற தொடர் காணப்படுகின்ற தன்றோ? இதனால் அருளே கண் ணாகக் காணின் காணலாகும்; அக்கண் இல்லாதார்க்கு எவ் வகையிலும் காட்டொனாது என்பது தெளிவாகின்றதன்றோ? பிறிதோர் இடத்திலும் இப்பெருமான், நின் அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே' என்று கூறுவதையும் காணலாம். அவனரு ளாலே அவன்தாள் வணங்கி" என்று மணிவாசகப் பெருமானின் அநுபூதி வாக்கினையும் காணலாம். இதனையே, ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி’ என்று மெய்கண்டாரும், பாச ஞானத்தாலும் பசுஞா னத்தாலும் பார்ப்பரிய பராபரனைப் பதிஞா னத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடி’ என்று அருணந்தி தேவநாயனாரும் தெளிவுறுத்துகின்றனர். 90. அப். தேவா 91. திருவா. சிவ 4 அடி. 14 92. சி.ஞா.போ. சூத். 9 93. சித்தியார் - 9.1