பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள்: 1 (பதி) - - - - - - - . . . . . . -- 113 எனவே, சத்தென்பது மெய்ம்ம்ை, அஃதாவது என்றும் ஒரு படித்தாயிருக்கும் பதி ஒன்றே சத்து என்பது முடிவாகின்றது. சித்து-விளக்கம் சித்து என்பது அறிவு. அஃதாவது எல்லாவற்றையும், எப்பொழுதும், தானே அறியும் அறிவாகும். இது சிற்றறிவினைக் குறியாமல் பேரறிவினையே குறிக்கும் என்பதை அறிதல் வேண்டும். ஏனெனில், ஒன்றை அறியுங் கால் மற்றொன்றை அறியாது ஒவ்வொன்றாய் அறிதலும், ஒருகால் அறிந்து மற்றொருகால் அறியாது நிற்றலும், தானே அறியாது பிறர் அறிவித்தபின் அறிதலும் அறிவு எனப்படாது. ஆதலின், இக்குறைபாடுகள் எல்லாம் உயிர்கட்கு உண்டு. அதனால், - - - - - பொறியின்றி ஒன்றும் புணராத புத்திக்கு அறிவு என்ற பேர்நன்று அது" என்று கூறுவார் உமாபதிதேவநாயனார். இதனை ஈண்டுச் சிந்திக்க வேண்டும். இதனால் இறைவன் இக்குறைபாடுகள் ஒன்றும் இல்லாத பேரறிவினையுடைவன் ஆகின்றான் என்பது தெளிவாகின்றது. இவனே சித்துப்பொருள் ஆகின்றான். ஆனந்தம்-விளக்கம் ஆனந்தம் என்பது இன்பம். அஃதாவது எல்லையற்ற இன்பத்துக்கு எல்லையான நிலையாமையும் துன்பமும் ஆகும். இவ்விரண்டும் இல்லாத இன்பமே இவண் குறிப்பிடுவது. இதுவே பேரின்பம் என்றும் 'நிர கிசயானந்தம் என்றும் குறிக்கப்பெறும். இதனை மெய்யறிவின்பம் எம்ை கூறலாம். ஆகவே சத்தாயும் சித்தாயும் ஆனந்தமாயும் நிற்றலே பதியினது உண்மை இயல்பாகின்றது. உண்மையில்புகளாக வேறுபல கூறப்பெறி னும் அவையெல்லாம் இவற்றுள் அடங்குவனவாகும். இம் 106.திருவருப்பயன் - 2.5