பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) 119 தூட்டும் தாயினும் சாலப்பரிந்து' என்ற மணிவாசகப் பெருமானின் திருவாக்கும் பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுத்தது போன்ற (திருவிளையாடற் புராணம்) திருவிளை யாடல்களும் இறைவனிடம் அஃது அமைந்துள்ளதை அரண் செய்கின்றன. முடிவிலாற்றலுடைமை: 'அனந்த சக்தி என்பது இதன் வடமொழிப் பெயர் ஈண்டு சக்தி என்பது செயலாற்ற லைக் குறிக்கின்றது. அருளுடைமை பயன் தருவது, செய லாற்றல் வன்மையுடையதாக இருக்கும்பொழுதுதான் என்பது உண்மையாதலின் பேரருளுமையின் பின் அமைந்துள்ளது. இஃது இறைவன் திரிபுரத்தை நகைத்தெரித்தது, கைலாயத் தைத் தூக்கிய இராவணனைத் தன் கால்விரலால் அடர்த்தது போன்ற வரலாறுகளால் தெளியப்படும். வரம்பிலாற்றலுடைமை. இது வடமொழியில் திருப்தி' எனப்படும். இஃது இறைவன் எவ்வாற்றாலும் யாதொரு குறையும் இல்லாதவன் என்பதை உணர்த்தும். யாதானும் குறையுடையவனாயின் மேற்குறிப்பிட்ட குணங்கள் பலவும் இல்லாதொழியும். ஆகவே, இஃது இறுதியாக அமைந்த குணமாயிற்று. இங்ங்னம் எண்குணங்களையுடைவன் இறைவ னாதலால் அவனே எல்லாப் பொருளினும் பெரும்பொரு ளாதல் தெளியப்படுகின்றது. பெரும்பொருள் என்பதனையே உபநிடதங்கள் பரப்பிரம்மம் எனக்கூறுகின்றன. பெரும் பொருள் எனவே, அகண்டிதப் பொருள் என்பது போதரு கின்றது; தாயுமான அடிகளும், 13. திருவா. பிடித்த பத்து 9