பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£24 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் பாடாகாது. ஆகவே சூனியம் என்பதும் இன்மையேயாம். இதனை இல்லதும் உள்ளதும் அல்லாத ஒரு பொருள் இருக்கின்றதோ?’ என்று வினவினால் இருக்கின்றது என்று விடைகூற வேண்டும். இருக்கின்றது என்றால், அஃது உள்ள பொருள்தானே? அதனை உள்ளதற்கு வேறானது என்று எங்ங்னம் கூற முடியும்? முடியாது. ஆகவே, உள்ளதும் இல்லதும் அல்லாத ஒன்று என்பது பொருளற்ற பேச்சாகும். ஆதலின், உயிரை அத்தன்மையதாக- அதாவது சூனியம் தான் உயிர் எனப்படுகின்றது என்பதாக- கூறுதல் சிறிதும் பொருந்தாததன்றோ? இவ்வாற்றால் உயிர் சூனியப் பொரு என்று உள்ள பொருளே என்பது பெறப்படுகின்றது. (ஆ) உடம்பு உயிராகாமை மக்கள் முதல் தாவரம் ஈறாகக் காணப்படுகின்ற பிறவிகள் பலவற்றிலும் அவற்றினது அறிவு கண்ணிற்குப் புலனாகும் பரு உடம்பிற்கு துல தேகத்திற்கு வேறாகக் காணப்படாமையால் பரு. உடம்பே உயிர் என்பர் தேகான்மவாதிகள். மேலும், அவர்கள் உடம்பு பூதங்களின் காரியமேயாதலானும் பூதங்கள் யாவும் சடமேயாதலானும் சடப்பொருளிலிருந்து அறிவு தோன்றாது என்பதில்லை. வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு என்ற மூன்று பொருள்கள் ஒன்றிலும் சிவப்பு நிறம் இல்லை. ஆயினும் இம்மூன்றும் ஒன்றுபடுங்காலத்தில் முன்பு இல்லாத நிறம் தோன்றுகின்றது. அது போலவே, பூதங்கள் தனித்தனியாய் இருக்கும்பொழுது சடமாய் இருப்பினும் அவை ஒன்று கூடும் பொழுது முன்பு இல்லாத ஓர் அறிவு தோன்றும் என அவர்கள் வாதிப்பர். ஆனால் சற்காரியவாதம், காரணகாரிய இயைபு 'முதலிய வழிகளில் அவர்கட்கு உண்மையை விளக்குதல் அரிது என்னும் கருத்தால் வேறு ஓர் எளிய முறையில் அவர்களது கொள்கையை மறுப்பர் மெய்கண்டார். . 3. இஃது அறிவுக்குப் பொருத்தமான உவமை இல்லை.