பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 2. (பசு) 129 யது. அதுவே ஆன்மா என்ற வேறொரு பொருளாகும்’ என்பது. (எ) கருவிக் கூட்டங்கள் உயிராகாமை: ஐம்பொறிகள் முதலாகக் காட்சிப் பொருளாய் விளங்கும் கருவிகளும், மனம் முதலாகிய கருத்துப் பொருளாய் விளங்கும் கருவிகளும் அனைத்தும் கூடிய தொகுதியே உயிர் என்பர் சமுதாய ஆன்மவாதிகள். "இங்ங்னம் திரண்டு நிற்கும் பொழுது உடம்பு என்ற பெயரால் வழங்கப்படுவதன்றி உயிர் என்று வழங்கப் பெறுதல் இல்லை. உடம்பு’ ‘உயிர் என்னும் சொற்கள் வேறுவேறு பொருளைக் குறிக்க அமைந்த சொற்கள். உடம்பு என்ற சொல்லால் குறிக்கப் பெறும் பொருளை உயிர்' என்னும் சொல்லால் குறிக்கப்பெறும் பொருளாகக் கொள்ளுதல் எவ்வாற்றானும் பொருந்தாது. சடப்பொருள்களினின்றும் எவ்வாறேனும் சித்துப் பொருள் தோன்றமாட்டாது. ஆகவே அனைத்துக் கருவிகளும் ஒருங்கு கூடிநிற்பினும் அவற்றினின்றும் அறிவு தோன்றுமாறில்லை. அத்தொகுதிக ளிடமாக நிகழும் அறிவு அவை அனைத்திற்கும் வேறானதேயன்றி அவற்றின் உள்ளதன்று. அதனால் அறிவுப் பொருளாகிய உயிர் அத்தொகுதியின் வேறானது. ஆகவே, நன்கு நோக்கினால் ஒளிமறைந்த கண்ணுக்கு உருவத்தை அறிய உதவும் கண்ணாடி போல, அறிவை இழந்த உயிருக்குப் பொருள்களை அறிய முடிய உதவுகின்ற கருவியே உடம்பாவ தன்றி, உடம்பு எவ்வகையிலும் உயிராகாது” என்பது மெய்கண்டாரின் மறுப்பாகும். (ஏ) பரப்பிரம்மம் உயிராகாமை “பரப்பிரம்மம் ஒன்றே உள்ளது; இரண்டாவது பொருள் இல்லை” என்னும் கொள்கையுடையவர்கள் ஏகான்மவாதிகள். ஆகையால் இவர்களை அத்வைதிகள் என்றும் கூறுவர். இவர்கள் ஆதிசங்கரர் மதத்தைத் தழுவியவர்கள் -