பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் பெற்று நிற்கும். அறிந்தவற்றை மறக்கும் தன்மையும் உயிர் களுக்கு இருப்பது தெளிவு. இத்துணைக் குறைபாடுகளை யுடைய சிற்றறிவாகிய உயிரைப் பேரறிவாகிய பரப்பிரம்மத் தின் பிரதிபிம்பம் எனக்கூறின் அது பொருள்களின் பெற்றியை நன்கு உணராது கூறும் கூற்றேயாகும். அதனால் ஏகான்மவாதிகள் (பிரம்மான்மவாதிகள்) 'சீவான்மாவும் பரமான்மாவே யன்றி வேறில்லை எனக் கொண்டு நானே பிரம்மம் எனக் கூறிக் கொள்ளுதல் மயங்கிக் கூறிக் கொள்ளு தலாகும்.” - (v) மற்றும், பரப்பிரம்மத்தின் அறிவு எஞ்ஞான்றும் தனக்குப் பிறிதொரு துணைவேண்டாது தானே விளக்கி நிற்பதாகலின், அது சுயம்பிரகாசம் என்பதாகும். உயிரின் அறிவு அவ்வாறின்றி எஞ்ஞான்றும் யாராயினும் ஒரு துணை யைக் கொண்டே விளங்குவதாகலின் அது வியஞ்சகப் பிரகாசம் என்பதாகும், அதனால் வியஞ்சகப் பிரகாச அறிவாகிய உயிர் எவ்வாற்றாலும் சுயம்பிரகாச அறிவாகிய பரப்பிரம்மம் ஆமாறு இல்லை.” () பின்னும், “பரப்பிரம்மத்தின் அறிவு பிரிதொன்றால் திரிபெய்தாது, எஞ்ஞான்றும் தன்தன்மையிலேயே நிற்பது, அதனால் அது சுதந்திரமான அறிவாகும். உயிரின் அறிவு அவ்வாறின்றி அடுத்தது காட்டும் பளிங்குபோல், அறியப் பட்ட பொருளின் தன்மையே தன் தன்மையாகத் திரிந்து நிற்கும் இயல்புடையது. அதனால் அது பரதந்திரமான அறிவு ஆகும். இதனை நன்குணர்ந்தால் பரதந்திர அறிவான உயிர் எவ்வாற்றானும் சுதந்திர அறிவான பரப்பிரம்மம் ஆமாறு இல்லை" என்பது தெளியப்படும். - இவ்வாறு பரம்பிரம்மமே உயிர் என்பாரது கூற்றும் சிறிதும் பொருந்தாமையைத் தெளிவுறுத்துவர் மெய்கண்டார்.