பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் (3) உயிரின் இயல்புகள் - மேலும் சில கருத்துகள்: (அ) உயிர் அறிவுடைப் பொருள்: அறியும் தன்மையுடையது உயிர் என்பதை நாம் அறிவோம். அறிவுபண்பு உயிர்- அதையுடைய பண்பி, அறிவாகிய பண்பு வேறு சில பண்புகள் போலக் காட்சிக்குப் புலனாகாது; அது கருத்திற்குப் புலனாகும். அறிவாகிய பண்பு காட்சிக்குப் புலனாகாதொழியவே, அதனையுடைய உயிராகிய பண்பியும் காட்சிக்குப் புலனாகாதொழிகின்றது. இதனால் கருத்திற்கு மட்டிலும் புலனாகின்ற அறிவை காணப்பட்ட உடம்பின் பண்பாகக் கூறுதல் பொருந்தாது. அங்ங்னமே கருத்திற்கு மட்டிலும் புலனாகின்ற மனம் முதலிய பிறகருவிகளின் பண்பாகவும் கொள்ளுதல் சிறிதும் பொருந்தாது. ஆகவே பருவுடம்பு துல சரீரம்), நுண்ணுடம்பு (சூக்கும் சரீரம்), நனி நுண் உடம்பு(டரசரீரம்) என்னும் கருவிகளாகிய சடப்பொருள் களினும், அறிவே வடிவமாய் நிற்கும் பரம்பொருளினும் வேறாய் நிற்கின்ற அறிவுடைய பொருள் எதுவோ அதுவே உயிர் எனப்படும் என்பது தெளிவு. ... . . . . . (ஆ) உயிர்கள் பல பதி’ என்ற கடவுட்பொருள் ஒன்றேயாகும். உயிர் அவ்வாறன்றி அளவிறந்தன. அதனால் இறையை ஏகன் என்றும் உயிரை அநேகன் என்றும் வழங்குவர். . . . . * - . - ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க..". என்ற மணிவாசகரின் மணிவாக்கால் இதனைத்தெளியலாம். உயிர்கள் எண்ணிறந்தன என்பதை மெய்ப்பிப்பதற்குச் சான்று ஒன்றும் வேண்டா, ஓர் உயிர் ஓர் உடம்பில் நின்று அநுபவிக் 10. திருவா. சிவபுரா. அடி. 5