பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் -2 (பசு) - #41 கூரலாம். தாயுமான அடிகளும் பளிங்கு அனையசித்து' என்று குறிப்பிட்டுள்ளதையும் சிந்திக்கலாம் படிகத்தின் வண்ணம் இவ்வாறு சார்ந்ததன் வண்ணமாக மாறுவதாயினும் "படிகத்தின் வண்ணம் என்ற ஒரு நிறம் அதற்கு உண்டு என்பதனை மறந்து விடுதல் கூடாது. இன்னோர் எடுத்துக் காட்டு: கண் ஒளியைச் சாரும்பொழுது ஒளி வடிவாயும், இருளைச் சாரும் பொழுது இருள் வடிவாயும் நிற்றலை அநுபவத்தால் அறியப் பெறுவதாகும். இங்கும் கண்ணின் ஒளி இவ்வாறு மாறுவதனாலும் கண்ணுக்கென்று ஓர் ஒளி உண்டு என்பதனையும் மறந்து விடுதல் கூடாது. இங்ங்னமே பசுவாகிய உயிருக்கு ஒர் அறிவு உண்டு என்று அறியப்படும். இந்த அறிவு அறியப்படும் பொருளின் தன்மையாய் மாறும் என்பதனை நன்கு உணர்ந்து தெளியலாம். . நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு." . என்று வான்மறை வள்ளுவமும் குறிப்பிட்டுள்ளதைச் சிந்திக் கலாம். சார்ந்ததன் வண்ணமாதல்’ என்பது உயிரின் தன்னி யல்புகளில் (Essential nature) முதன்மையானது என்பது தெளியப்படும். இதனால் உயிர் எப்பொழுதும் தனித்து நின்று விளங் காது எனவும், ஒரு பொருளின் துணை கொண்டே அஃது அறியப்படும் என்பதும் அறிந்து தெளியப்படும். இதனால் உயிர்கள் எப்பொழுதும் தனித்தறியப்பெறா. அவை பெத்த நிலையில் பாசத்தோடும் முத்தி நிலையில் பதியோடும் வைத்தே அறியப்படுவனவாகும். 14. தா.பா. ஆகாரபுவனம் - 18 15. குறள் - 452