பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் و: {په ; ஆணவமலத்திற்கு மாற்றாய் உள்ளது உடம்பு. ஆண வத்தை நீக்கும் மாற்றுப் பொருளாக இறைவன் மாயையின் காரியமாகிய உடம்பை ஆன்மாவிற்குக் கூட்டியருளுகின்றான். உடம்பு உள்ள இடத்தில் ஆன்மாவிற்கு அறிவு நிகழ்தலும், ஏனைய இடத்தில் அறிவு நிகழாமையும் இயற்கையாகின்றன. ஆகவேதான் ஆன்மா தான் ஒன்றை அறியவும் செய்யவும் விரும்பும் இடத்திற்கு இறைவனால் தனக்குக் கொடுக்கப் பெற்ற உடம்பைச் செலுத்துகின்றது. இத்தகைய உடம்பின் இடப்பெயர்ச்சியையே உயிரின் இடப்பெயர்ச்சியாக நினைத்து மயங்குகின்றோம். நுணுகி நோக்கினால் உண்மையில் இடம்விட்டுப் பெயர்வது உடம்பேயன்றி உயிரன்று என்பது தெளிவாகும். இக்கூறிய உண்மை தத்துவ ஆராய்ச்சியில் ஆன்மாவின் இயல்பை நுனித்துணரும் இடத்தில்தான் தெளிவாகும். ஏனைய இடங்களில் இது தெளிவாகாமையால், வழக்கத்திலேயன்றி நூல்களிலும் கூட உயிரே போக்குவரவு புரிவது போலக் கூறப்பெற்றிருப்பதையும் காணலாம். துறக்கப் படாத உடலைத் துறந்துவெந் தூதுவரோடு இறப்பன்; இறந்தால் இருவிசும் பேறுவன் ஏறிவந்து பிறப்பன்; பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர் மறப்பன் கொலோஎன் றென்.உள்ளம் கிடந்து மறுகிடுமே" என்ற அப்பர் பெருமானின் திருவாக்கினாலும், இருவினை யின்-போக்கு வரவு புரிய" என்ற அருள்ஞானச் செல்வர் மெய்கண்டாரின் பெருவாக்கிலும், - 18. அப், தேவா. 4.113:8 19. சி.ஞா.போ. சூத். 2