பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#52 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் பிறிதோர் உண்மை: ஆணவமலம உயிரினது அறிவு. இச்சை செயல்களை செயற்படவொட்டாது தடுத்து நிற்குமே யன்றி அவற்றை அழிப்பதில்லை, அழித்துவிடவும் இயலாது. ஏனெனில், தோற்றமும் கேடும் அறிவில்லாத பொருளிடத்தில் நிகழுமேயன்றி அறிவுடைய பொருளிடத்து நிகழா. ஆகவே, அறிவு இச்சை செயல்கள் இறைவனிடத்திலாயினும் உயிரி னிடத்திலாயினும் அழிவில்லனவாகும். ஆணவமலம் உயி ரினது அறிவு இச்சை செயல்களைத் தடுத்து நிற்கும் அளவே செய்வதாகும். சடப் பொருள்களுள் ஒன்று மற்றொன்றில் இயல்பு கெடுமாதலின், மாயை கன்மம் என்பவற்றால் ஆணவ மலம் உயிரின் ஞானம் இச்சை, கிரியை செயல்களைத் தடுத்து நின்ற நிலைமை கெடப் பெறும். இங்ங்ணம் நிலைமை கெடவே, தடுக்கப்பட்டு நின்ற அறிவு முதலியவை செயற்படத் தொடங் கும். இது விடம் தலைக்கேற மூர்ச்சித்துக் கிடந்தவன் மணி மந்திர மருந்துகளால் விடம் இறங்கப்பெற்று உணர்வுடன் எழுதல் போலாகும். உயிரை இந்நிலைக்கு உட்படுத்தலால், ஆணவமலத்திற்கு மூர்ச்சை என்ற ஒரு திருப்பெயரும் வழங்கப்பெறுகின்றது. இங்ங்னம் சூக்குமப் பொருள், தூலப்பொருள், அறிவில் பொருள் என்பவற்றை நுனித்து அறிந்தால்தான் ஆன்ம சொரூபம் தெளிவாக விளக்கம் அடையும், இறைவனைப் போல் சூக்குமப் பொருளாகாத உயிர் தூலமாயிருத்தலின் ஆணவமலத்தால் பற்றப்படும்போது பல்வேறு நிலையினை அடையும். அந்நிலைகள் விளக்கப்பெறுதல் வேண்டும். (5 ஆணவத்தால் கட்டுண்ட ஆன்மாவின் நிலைகள் உயிர் துலசித்தாதலால் அஃது இயல்பாகவே பாசத்தால் கட்டுண்டு கிடத்தல் அதன் பொது இயல்பாகும். இந்நிலை ஒரு