பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் -2 (பசு) 153 காலத்தில் நீங்குவதேயாகும். உயிர் ஆணவமலத்தோடு மட்டும் இருப்பது பின்னர் அது மாயை கன்மங்களோடு கூடியிருப் பது. பின்னர் மும்மலங்களும் நீங்கப்பெற்று இறைவனோடு கலப்பது என்ற மூன்று நிலைகளையும் அவத்தை (அவஸ்தை) என்று கூறுவர் வடமொழியாளர்கள். ஈண்டு அவை விளக்கப்பெறும்’ (அ) கேவலாவத்தை உயிர் ஆணவமலத்தோடு மட்டும் இருக்கும் நிலை கேவலம் என வழங்கப்பெறும். கேவலம் என்ற சொல் தனிமை என்று பொருள்படும். இந்த நிலையில் ஆன்மாவிற்கு அறிவு, இச்சை செயல் இல்லை. உடம்பும் இல்லை. உட்கருவி செயல்களாகிய மனம் முதலியனவும் இல்லை. அதனால் வினைகளை ஈட்டுவதும் இல்லை; அவற்றின் பயனாகிய இன்பதுன்பங்களை நுகர்வதும் இல்லை; உடல், பொறி, கரணம் முதலிய எதுவும் இல்லாமல் அறியாமையே வடிவமாய்க் கிடக்கும் இந்நிலையை 'இருள்நிலை என்று வழங்கலாம். இருள்-அறியாமை. உயிர் என்பது ஒன்று இல்லை என சொல்லாமல் உள்ளது என்பது மட்டும் கூற நிற்பதால் இது தன் உண்மை’ என்றும் கூறப்பெறும். (ஆ) சகலாவத்தை இருள் நிலையாகிய கேவலத்தில் உயிர் அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் கொடுமையைக் 'கண்டு கண்ணுதலான் இரக்கங் கொண்டு கருணை காட்டுகின்றான். உயிரினிடம் அறியாமையைத் தந்து நிற்ப தாகிய ஆணவமலத்தைப் போக்குதற் பொருட்டு மாயை, கன்மம் என்ற இரண்டு மலங்களையும் கூட்டுவிக்கின்றான். அவற்றால் ஆணவமலம் சிறிதே நீங்கப்பெற்ற உயிர் உடல் 29. திருமந். செய் 2142.2246இல் அவத்தை பேதங்கள் விளக்கப் பெறுகின்றன. சிவப்பிரகாசம் 33.49இலும் இந்த அவத்தை நிலைகளைக் கண்டு தெளியலாம்.