பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#56 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் இந்த அவத்தைகளை அடைந்து நிற்பதே உயிரின் தடத்த இலக்கணம் எனப்படும் பொது இயல்பு ஆகும் என்பது அறிந்து தெளியப்படும். மேற்குறிப்பிட்ட சாக்கிரம் முதலிய ஐந்தும் கீழால வத்தை மேலாலவத்தை, மத்தியாலவத்தை என்ற மூன்று வகையாக நிகழும். கிழாலவத்தையில் அறிவு குறைந்து கொண்டே வரும். இம்முறையில் உயிர் சிறப்பாக நிற்கும் இடமும் ஐந்தாகும். அயைாவன: சாக்கிரத்திற்கு - புருவநடு; சொப்பனத்திற்கு - கண்டம் (கழுத்து); சுழுத்திக்கு - இதயம்; - துரியத்திற்கு - நாபி (உந்தி); துரியாதீதத்திற்கு - மூலாதாரம் என்பனவாகும். இங்ங்னம் முறையே இறங்கிய உயிர், பிறகு அம் முறையே மேலேறி வருவதே மேலாலவத்தையாகும். இந்நிலையில் இறுதியாகப் புருவ் நடுவை அடைந்த உயிர் அவ்விடத்திலேயே ஐந்து நிலைகளை அடையும். இவையே மத்தியாவத்தையாகும். இவை முறையே சகல சாக்கிரம், சகல சொப்பனம், சகல கழுத்தி, சகலதுரியம், சகலதுரியா தீதம் என்று வழங்கப்பெறும். இந்நிலையில் உயிர் தன்னால் அறியப்படும் பொருளில் அழுந்தி நிற்கும். இவ்வழுத்தம் சாக்கிரம், சொப்பனம் முதலியவற்றில் ஒன்றைவிட மற்றொன் றில் முறையே மிகுந்து நிற்பதாகும். இறுதி நிலையாகிய சாக்கிராதீதத்தில் உயிர்ப்பு அடங்குதலும் உண்டு. இந்நிலை களைத் தெளிவாக எடுத்துக்காட்டல் இயலாது; அவரவர்களே தாங்கள் தங்கள் அன்றாட நிகழ்ச்சிகளில் வைத்து அறிந்து