பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 2 (பசு) #57 கொள்ளல் வேண்டும். இந்நிலைகள் பொருள்களை அறியுங் காலத்தில் அவற்றை இடைவிடாது அறிதலும் விட்டுவிட்டு அறிதலுமாகும். சாக்கிர நிலையில் பொருள்களை அறியும். பொழுது நாம் இடைவிடாது தொடர்ச்சியாக அறிந்து கொண்டே இருப்பதில்லை. இடையில் விட்டுவிட்டுதான் அறிகின்றோம். அது நுனித்து நோக்கும்போதுதான் தெளி வாகப் புலனாகும். ஆயினும் விடுதலும் பற்றுதலும் மிக விரை வில் மாறி மாறி நிகழ்வதால், சாக்கிர நிலையில் விடுதல் நமக் குப் புலனாதல் இல்லை; தொடர்ச்சியாய் அறிந்து கொண்டிருப் பதுபோலவே தோன்றுகிறது. அஃது உண்மையன்று என் பதைச் சில பெரிய நிகழ்ச்சிகள் நிகழும்போது தெரிந்து தெளியலாம். - கீழாலவத்தையில் உயிர் அறியாமையில் அழுந்துவ தால் அவை ஐந்தும் கேவலசாக்கிரம், கேவலசொப்பனம், கேவலசுழுத்தி, கேவலதுரியம், கேவலதுரியாதீதம் என்று சொல்லப்பெறும். இவ்விரண்டையும் விடுத்துச் சிவத்தில் அழுந்தும் நிலையிலும் ஐந்து வகை உண்டு. அவை சுத்த சாக்கிரம், சுத்த சொப்பனம், சுத்த சுழுத்தி, சுத்த துரியம், சுத்த துரியாதீதம் என்று வழங்கப்பெறும். கேவலம் - மறுப்பு: சகலம் - நினைப்பு: சுத்தம் - இவ்விரண்டும் அற்றது. கேவ லத்தை இரவு என்றும், சகலத்தைப் பகல் என்றும் கூறுவர். ஆகவே, சுத்தம் - இராப்பகல் அற்ற இடம் என்ற பெயரைப் பெறுகின்றது. இவற்றை முத்திநிலை கூறுமிடத்தில் தெளிவாக விளக்கப்பெறும்.’’ ஆகவே சாக்கிரம் முதலிய ஐந்தும் கேவலம், சகலம், சுத்தம் என்ற மூன்று நிலை பற்றி நிகழும் எனவும், முத்திறந்து ஐந்து அவத்தைகள் உயிர்கட்கு உள்ளன எனவும் நன்கு உணர்ந்து தெளியப்படும். யோக 32. இந்நூல் பக்.