பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் நிலையினும் ஐந்து அவத்தைகள் உண்டு. அவை பின்னர் விளக்கப் பெறும்." எடுத்துக்காட்டு: மேற்கூறிய ஐந்து அவத்தைகளில் ஐந்து இடங்களில் நின்று செயற்படுவதை எடுத்துக்காட்டு ஒன்றால் விளக்குவோம். உயிர் புருவ நடுவில் நின்று சகல சாக்கிரம் முதலியவைகளை அநுபவித்தல் அரசன், அமைச்சர், படைத் தலைவர் முதலியவரோடு அத்தாணி மண்டபத்தில் வீற்றிருந்து அரசு புரிதல் போன்றது. கீழாலவத்தையில் இறங்கி இறுதியில் மூலாதாரத்தில் செல்வது, அரசன் அத்தாணி மண்டபத்தை விட்டுப் பல இடங்களைக் கடந்து அந்தப் புரத்துக்குச் செல்வது போன்றது. இங்ங்னம் இவ்விரு வகை ஐந்தவத்தைகளையும் விடுத்துச் சிவத்தை நாடுதல் அரசன் தனது ஆட்சியை முற்றிலும் விடுத்து ஓய்வு கொள்ளுவதைப் போன்றது. உயிர்கள் அளவிறந்தன என்பது முன்னர் விளக்கப் பெற்றது." இதே உயிர்கள் மூவகை ஐந்தவத்தைகளை அடையும் பொழுது உடம்பு தோறும் அவை வேறு வேறாய் நிகழ்கின்றன. அந்நிகழ்ச்சிகளால் வரும் இன்ப துன்ப நுகர்ச்சிகளும் உயிர்தோறும் வேறு வேறாகவும் உள்ளன. இதனால் உடம்புதோறும் உள்ள உயிர்கள் அனைத்தும் தனித்தனி உயிர்களேயன்றி ஒன்று அல்லது ஒன்றன் கூறாகாமை ஐயமற விளங்குவதாகும். இதனால் உடம்புகள் எண்ணிறந்தனவே என்பது கண்கூடாதலின் அவற்றையுடைய உயிர்களும் எண்ணிறந்தனவே என்பது போதரும். தானே அவையேயாய்” எனவும், தாம்தம் உணர்வின் தமிழ்" 33. இந்நூல் பக். . . 34. சி.ஞா.போ. சூத்2. அதி.3 வார்த்தி 24(a) சிற்றுரை 35. சி.ஞா.போ. சூத். 2 36. மேலது. சூத். 5