பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 66 சைவசித்தாந்தம்-ஒர் அறிமுகம் இங்ங்னமே, அரிசி தோன்றும்பொழுது உமியோடு கூடத் தோன்றுகின்றதேயன்றி தனியாகத் தோன்றுவதில்லை. அரிசிக்கு உமி குற்றமேயன்றிக் குணம் அன்று. அதனால் உமி அரிசியை விட்டு நீங்கும்பொழுது அரிசி தூய்மை பெற்று விளங்குகிறது. ஆகவே, உமியாகிய குற்றம் அரிசிக்குச் செயற்கையேயன்றி இயற்கையன்று என்பது தெளிவு. இங்ங்னமே உயிர் என்று உண்டோ, அன்றே அதற்கு ஆணவ மலம் இருப்பினும், அஃது அதற்குக் குற்றமாய்ப் பின்பு விட்டு நீங்குதலின், அது செயற்கை எனப்படுமன்றி இயற்கை' எனப்படாது. இம்மலம் சக சமலம்' என்றும். அநாதி செயற்கை என்றும் வழங்கப் பெறும். சகசம் என்பதற்குக் கூடப்பிறந்தது என்பது பொருள். (1) ஆணவம் ஒன்றே. ஆணவமலம் ஒன்றேயன்றிப் பல இல்லை. ஆயினும் எண்ணற்ற சக்திகளையுடையது. அதனால் எண்ணிலாத ஆன்மாக்களை மறைத்து நிற்றல் அதற்குக் கூடுவதாகின்றது. ஆணவமலத்தின் இயல்பினைச் சிவப்பிரகாசம், ஏகமாய்த் தம்கால எல்லைகளின் மீளும் எண்ணரிய சத்தியதாய்" என்று செப்பும். சித்தியாரும், ஒன்றதாய் அநேக சக்தி யுடையதாய் உடனாய் ஆதி அன்றதாய் ஆன்மா வின்தன் அறிவொடு தொழிலை ஆர்த்து நின்றுபோத் திருத்து வத்தை நிகழ்த்திச்செம் பினிற்க ளிம்பேய்ந் தென்றும்அஞ் ஞானம் காட்டும் ஆணவம் இயைந்து நின்றே" 3. சிவப்பிரகாசம் - 20 4. சித்தியார் 2.80