பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள்-3 (பாசம்) 167 என்று தெளிவுறுத்தும். பகலவன் ஒரு பொருளேயாயினும், எண்ணற்ற கதிர்களைகக் கொண்டு எண்ணற்ற பொருள்களை விளக்குகின்றான்; இது விளக்கும் சக்தி. இதுபோலவே இருளும் ஒன்றாய் இருந்தே எண்ணில்லாத சக்திகளைக் கொண்டு எண்ணில்லாத கண்களை மறைக்கின்றது என்றும், இது மறைக்கும் சக்தி என்றும் உணர்தல் வேண்டும். இங் நனமே, ஆணவமலமும் எண்ணிறந்த மறைக்கும் சக்திகளைக் கொண்டதாய் எண்ணற்ற ஆன்மாக்களை மறைக்கின்றது என்பது தெளியப் படும். (2) செயற்படுதல்: இனி, ஒன்றாய் சடமாய், அளவற்ற சக்திகளையுடைய ஆணவமலம் கேவலம், சகலம், சுத்தம் என்ற மூன்று நிலைகளிலும் செயற்படுகின்றது. (அ) கேவலநிலையில் ஆணவ மலத்துடன் மாயை கன்மங்களின் செயற்பாடு இன்மையால் ஆணவமலம் அங்குத் தனது மறைத்தல் செயலைத் தடையின்றிச் செய்யும். அதனால் ஆன்மா அந்நிலையில் தனது அறிவு, இச்சை செயல் என்பவற்றில் ஒன்றும் ஒரு சிறிதும் நிகழப் பெறாது முழு மூடமாய்ச் சடப் பொருள் போலவே தான் என்ற பொருள் இருப்பதாகவே தோன்றாமல், ஆணவமலத்தில் அமிழ்ந்து கிடக்கும். அப்பொழுது ஆணவ மலத்தின் சக்தி அறியாமை யைத் தரும்பொழுது 'ஆவாரக சக்தி என்று பெயர் பெறும். ஆவாரகம்-மறைப்பது. இதுவே ஆணவமலத்தின் சொரூபம் அல்லது உண்மை நிலையாகும். (ஆ) சகல நிலையில் மாயை கன்மங்கள் செயற்படு கின்றன. இந்நிலையில் ஆணவத்தின் சக்தி சிறிது அடங்கப் பெறும், அதனால் அது பருப்பொருளைக் காணும் காட்சியை மறைப்பதில்லை. நுண்பொருளைக் காணும் காட்சியை மட்டிலும் மறைத்து நிற்கும். நுண்பொருளைக் காணும் ஆற்றல்