பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் -3 (பாசம்) 169 வைத்தோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யு மனமே" என்ற சித்தியாரின் கூற்று இதுபற்றியதேயாகும். (இ) சுத்தநிலையில் உயிர் இறைவனது திருவருளை நேரே பெற்று விளங்குகின்றது. இந்தப் பேரொளியின் முன் ஆணவத்தின் மறைத்தல் சக்தியும், மாயை கன்மங்களின் சிறு விளக்கச் சக்திகளும் சிறிதும் முனைந்து நிற்கமாட்டாது அடங்கியே கிடக்கும். அதனால் அச்சக்திகள் அனைத்தும் அப்பொழுது அந்தர்ப்பாவிதசக்தியாய் - அடங்கிக் கிடக்கும் சக்தியாய் - விடுவனவாகும். இதனை ஒர் எடுத்துக் காட்டு மூலம் தெளிவிக்கலாம். பகலவன் ஒளியின் முன் விளக் கொளி அடங்கிக் கிடக்கின்றதேயன்றி அழிந்தொழியவில்லை. என்பது எல்லார்க்கும் உடன்பாடு அதுபோலவே இருளும் பகலவன் முன் அடங்கிக் கிடக்கின்றதேயன்றி அழிந்தொழிய வில்லை என்பதும் உண்மையாகும். அஃதெங்ங்னம்? இருள் கதிரவன் ஒளி உள்ள பொழுதும், பிறபொருள்களின் நிழல் தோன்றுவதாலும் அவ்வொளி மறைந்தவுடன் முன் போலவே இருள் வந்து சூழ்வதாலும் அறியப்படும். எனவே, ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களும் என்றும் உள்ள பொருள்களே, அவை பெத்தத்தில் உள்ள ஆன்மாக்களைப் பற்றுகின்றன என்பதும், முத்தியில் உள்ள ஆன்மாக்களைப் பற்றுவதில்லை என்பதுமாகிய வேறுபாட்டில் மட்டும் உள்ளன என்பது தெளிவு. இதனை, முத்திதனின் மூன்று முதலும் மொழியக்கேள் சுத்தஅனு போகத்தைத் துய்த்தல்அணு-மெத்தவே இன்பம் கொடுத்தல்இறை இத்தைவிளை வித்தல்மலம் அன்புடனே கண்டுகொள்அப் பா!' 5. சித்தியார். 2. 53 6. உண்மை விளக்கம்-51