பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் என்ற உண்மைவிளக்கத்தாலும் அறியலாம். பெத்தத்தில் இறைவனது இன்பம் உயிரினிடத்து விளையவொட்டாது தடுத்து நின்ற ஆணவமலம் முத்தியில் அவ்வாறு செய்யமாட் டாது வாளா இருக்கும் என்பது இதன் கருத்தாகும். ஆகவே, சுத்தநிலையில் ஆணவ மலத்தின் சக்தி அந்தர்ப் பாவினது சக்தியாய் விடும் என்பது உளங்கொள்ளப்படும். (3) மூலமலம்: ஆணவமலம் ஏனைய மலங்கட்கு மூலமாதலின் மூலமலம்' என்றும், இயற்கைக் குற்றமாதலின் 'சகசமலம்' என்றும், அறியாமையே வடிவமாய் நிற்றலின் 'இருள்மலம்' என்றும் மற்றும் பலபெயர்களையும் பெற்று நிற்கும். ஒருவிதத்தில் ஆணவம் இருளை ஒத்திருப்பினும், இன்னொருவிதத்தால் ஆணவம் இருளைவிடக் கொடியது. இருள் தன்னிடத்திலுள்ள பொருளை மறைக்கும்; தன்னை மறைக்காது. ஆனால் ஆணவம் தன் செயலை மறைப்பது மட்டுமன்றித் தன்னையும் மறைத்துக் கொள்ளும். இருளில் மறைந்து கிடக்கும் பொருள்கள் நம் கண்ணுக்குப் புலானகா விடினும், அவற்றை மறைத்துக் கொண்டிருக்கும் இருளாவது நமக்குப் புலனாகும். ஆணவம் நம் அறிவை மறைக்கின்றது. அதே சமயம் தன்னையும் மறைத்துத் தன் செயலையும் மறைக்கின்றது. இருள் வெளிப்பட்டுத் தன்னைக் காட்டிக் கொண்டே தனது தொழிலைப் புரிகின்றது. ஆனால், ஆணவம் வெளிப்படாமல் தன்னை மறைத்துக் கொண்டே தன் தொழிலைச் செய்கின்றது. ஒருபொருளும் காட்டாது இருள்உருவம் காட்டும்; இருபொருளும் காட்டாது இது." என்றும், 7. திருவருட்பயன்-இருள்மலநிலை-3