பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள். பாசம்) 17] பலரைப் புணர்ந்தும்இருட் பாவைக்குண் டென்றும் கணவற்கும் தோன்றாத கற்பு." என்றும் இதன் கொடுமையை விளக்குகின்றார் உமாபதி சிவம். (4) ஆணவம் நீங்கியபின் அறிதல்: அறிதோறும் அறியாமை கண்டற்றால்’ என்றார் வள்ளுவப் பெருந்தகை. ஒருவர் தமக்குள்ள அறியாமையை அறிவுவந்தபின் அறிவதன்றி அவ்வறியாமை உள்ள பொழுது அறிவதில்லை. அதனால் அறியாமையாகிய ஆணவமலத்தை அது நீங்கிய பின் அறிவதல்லது அஃது உள்ளே பொழுது அறியமுடியா தன்றோ? அதனால்தான் ஆணவமலம் ஒருவற்கும் புலனாகாத பொருளாய் உள்ளது. சைவ சித்தாந்தம் தவிரப் பிற மதங்களுள் ஒன்றேனும் ஆணவமலத்தை ஒப்புக் கொள்வதில்லை. அறியாமை உடையவனுக்கு அவ்வறியாமை அறிவாய்த் தோன்றுவதல்லது அறியாமையாய்த் தோன்றாது. ஆதலின் அவருக்கு அறிவுகொடுத்தலும் இயலாது. இதனை, காணாதாற் காட்டுவான் தான்கானான்; கானாதான் கண்டானாம் தான்கண்ட வாறு" - - - என்று கூறுவார் வள்ளுவப் பெருந்தகை. “அறிவுபோல் அடர்த் தெழும் அறியாமையின் வலியால்' என்பர் மாதவச் சிவஞான யோகிகள். எனவே, அறியாமை நீங்குதல் அதற்குரிய காலம்வரின் அல்லது, அதற்கு முன்னே நீங்குதல் ஒருவராலும் இயலாது. ஆணவமலச் சக்திகள் பலவும் பல்வேறுகால எல்லையுடையன. அக்காலம் வரும்வரை அவை நீங்கா அக்காலம் வந்த பின்னரே அது நீங்கும். 8. மேலது.-5 9. குறள்-1110(புணர்ச்சி மகிழ்தல்) 10. மேலது.849 (புல்லறிவாண்மை);