பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் (5) ஒர் உண்மை. உயிர்கட்குள்ள அறியாமை அவற் றின் இயல்பன்று, அஃது ஆணவத்தின் காரியமாகும். இயற்கை யாயின் அஃது என்றும் நீங்காது. அதனால் அவற்றிற்கு வீடு' என்பது இல்லையாய்ப் பந்தமே நிலைத்ததாகி விடும். அதனால் அறியாமை உயிர்களின் இயற்கையன்று என்பது உளங்கொள்ளப்படும். உலகிலும் அறியாமை படிப்படியாய் நீங்கிவரக் காண்கின்றோமேயன்றி நீங்காது நிற்றலைக் காணவில்லையாதலாலும் இது தெளியப்படும். (6) மாயையின் செயல்: அறியாமை செயற்கையாயின் மாயை கன்மம் என்ற மலங்கள் அறியாமையைத் தருவன எனக் கொள்ளலாமோ என்ற ஐயம் எழலாம். அந்த ஐயம் போக்கப் பெறும். மாயையின் காரியங்கள் உடல், பொறி, கரணங்கள் ஆகும். இவை உயிர்களின் அறிவை விளங்கச் செய்வனவே யன்றி விளங்கவொட்டாது மறைப்பதில்லை. இதனை விழிப்பிலும் உறக்கத்திலும் நன்கு உணரலாம். விழிப்பில் உடல் பொறி கரணங்கள் செயற்படுகின்றன. அப்பொழுது உயிர்கள் அறியாமை நீங்கி அறிவு விளக்கம் பெறுகின்றன. உறக்கத்தில் அவை செயலற்றுக் கிடப்பதால் உயிர்கட்கு அறிவு நீங்கி அறியாமை மேலிடுகின்றது. இதனால், மாயை அறிவை விளக்குவதன்றி மயக்குவதன்று என்பது தெளிவாகும். மாயை இருளன்று; விளக்கு என்கின்றார் மெய்கண்டார். இந்த ஞானச் செல்வர், • , மாயா தனுவிளக்கால் மாற்றுள்ளம் காணாதேல் ஆதாரம்" - என்று கூறுவதைக் காணலாம். ஆணவமும் மாயையும் இருளும் ஒளியும் போலப் பகைப் பொருள் என்பர் உமாபதி சிவம். 11.சி.ஞா.போ. சூத்திரம்4. அதி.2. பா.27