பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் (அ) சுடும் தன்மையுடைய நெருப்பில் சக்தி தடை மந்திரத்தால் தடுக்கப்படும்போது சுடாது நிற்கும்; பின்விடை மந்திரம் செலுத்தப்பெறும்போது சுடுதல் தொழிலைச் செய்யும். (ஆ) விறகில் நெருப்பு மறைந்து கிடக்கின்றது. அத னைக் கடையும்பொழுது அந்த நெருப்பு வெளிப்படுகின்றது. இ) நீர் பாசியால் மறைக்கப் பெறுகின்றது. கல்லெறி முதலியவற்றால் அப்பாசி நீங்கி நீர் புலப்படுகின்றது. கையினால் பாசியை விலக்கி, நீர் புலப்படுவதை உணரலாம். இங்ங்னமே அறிவை மயக்கும் ஆணவ மலத்துடன் மாயை கன்மங்கள் சேரும்பொழுது மறைந்து நின்ற அறிவு முதலியவை வெளிப்படும் என்பதை அறிந்து தெளியலாம். எல்லா உயிர்களையும் ஒருங்கே மறைத்துக் கொண்ட ஆணவமலம், அது நீங்குங்காலத்து எல்லா உயிர்களினின்றும் ஒருங்கே நீங்காமல் சில சில உயிர்களாகவே நீங்குகின்றன. இவற்றிற்குக் காரணம் என்ன? எல்லா உயிர்களும் அறிவித் தால் ஒருங்கே அறிவதில்லை. அவை சிறிது சிறிதாகவே அறிகின்றன. இஃது உயிர்களின் பொதுத்தன்மையாகும். ஆயினும் சிறிது சிறிதாய் அறிவதிலும் பல்வேறு வகைப்பட முன் பின்னாய் அறிந்து வருதல் உயிர்தோறும் அமைந்துள்ள சிறப்பியல்பாகும். ஆகவே, அனாதியே ஆணவமலம் மறைத்து நிற்றல் எல்லா உயிர்களிடத்தும் பொதுவாக உளதா யினும் அம் மறைப்பு உயிர்தோறும் வேறு வேறு வகை யாகவே இருக்கும். இவ்வாறு மறைந்து நிற்கும் வகை துலம், சூக்குமம், அதிசூக்குமம் (பரம்) என்று மூன்றாய் அமையும்." T3 வகுப்பில் 40 மாணவர்கட்குக் கற்பிக்கும் ஆசிரியர் நாற்பது மாணவர்களும் தாம் கற்பித்த அனைத்தையும் ஒருங்கே அறிவதில்லை. அவரே அம்மாணக்கர்கள் சிலரைத் தனித் தனியாகக் கற்பிக்கும்போது ஒவ்வொருவரும் (அடுத்த பக்.