பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) - 177 குத் தாம் தொடங்கும் செயல் எதுவாயினும் அஃது இனிது முற்றுப் பெறுவதற்குரிய சூழ்நிலைகளே தொடர்ச்சியாக அமைந்து விடுகின்றன. எனினும் வேறு சிலருக்கு தொடங்கும் செயல்கள் அனைத்திலும் அவை தடைப் படுத்துவதற்குரிய சூழ்நிலைகளே தொடர்ச்சியாக அமைகின்றன. அன்றியும், ஒருவருக்கே சிலகாலம் தொடர்ச்சியாக நல்ல சூழ்நிலைகளே அமைவதையும், பின்பு சிலகாலம் தீமையான சூழ்நிலைகள் அமைவதையும் காண்கின்றோம். இவற்றால் இன்ப துன்பங் களுக்குச் சூழ்நிலைதான் காரணமாயினும் அச்சூழ்நிலைகளின் அமைப்பிற்குக் காரணம் வேறொன்று உள்ளது என்பது தெளிவாகின்றதன்றோ? அந்தக் காரணத்தைத்தான் வினை' அல்லது கன்மம்' என்று குறிப்பிடுவர் மெய்விளக்க அறிஞர்கள். முயற்சியின்பங்கு முயற்சியுடையவர் செல்வத்தையும் முயற்சி இல்லாதவர் வறுமையையும் அடைவர் என்பது ஒரு பொது விதி. வள்ளுவர் பெருமானும், முயற்சி திருவினை யாக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்" என்று இதனை விளக்குவர். ஆயினும், இப் பொது உண்மை சில இடங்களில் மாறுபடுவதையும் காண்கின்றோம். இரவு பகலாக உழைபவர்கள் வறுமையால் வாடுவதையும், சிறிதும் உழைக்காதவர்கள் செல்வத்துடன் இன்புற்றுத் திகழ்வதையும் நாம் காணாமல் இல்லை. ஆகவே, முயற்சியும் அஃதின்மை யும் செல்வத்திற்கும் நல்குரவிற்கும் காரணங்கள் அல்ல என்பது பெறப்படுகின்ற தன்றோ? வினையின் பங்கு ஒரு சிலருக்குப் பிறப்பிலேயே முன்னோர் ஈட்டிவைத்த செல்வம் கிடைத்து விடுகின்றது. 14. குறள்-616 (ஆள்வினையுடைமை)