பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 82 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் அநுபவமும் உடையவராகிய ஒருவர் குறிப்பிட்ட ஒரு செயலில் அறிவு மயங்கித் தவறான வழியில் சென்று கேடுறுவதற்கும் அவருடைய தீவினைதான் காரணம் என்பதும் உளங்கொள்ளப்படும். இவர்கள் இருவருக்கும் எதிராக இயற்கையில் சோம்பலுடையவரும் மந்தமதியுடையவ ரும், கல்வியும் பட்டறிவும் இல்லாதவரும் பெருநலம் பெறு வதற்கும் அவரது நல்வினைதான் காரணமாகும். எனவே, உலகில் ஒவ்வொருவருக்கும் அவ்வப்பொழுது வரும் நன்மைதீமைகட்கு எல்லாம் அவரவர்கள் முயற்சி செய்வதும் ச்ெய்யாமையும் அல்ல என்பது தெளிவாகின்றதன்றோ? இதனால் வினை என்ற கன்ம மலம் உண்டென்பது நன்கு புலனாகும். நாலடியாரில் பழவினை என்ற ஓர் அதிகாரமும், திருக்குறளில் ஊழ் என்ற ஓர் அதிகாரமும் இருப்பதை நாம் அறிவோம். அந்த இரண்டையும் படித்தால் கன்ம மலம்’ பற்றிப் பல செய்திகளையும் அறிந்து கொள்ளலாம். ஊழ்' என்ற சொல்லுக்கு “இருவினைப் பயனும் செய்தவனையே சென்றடைவதற்கேதுவான நியதி' எனப் பொருளுரைப்பர் பரிமேலழகர் மேலும் அவர் ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி ஆகிய யாவும் ஒரே பொருளுடைய சொற்கள் எனவும் தெரிவிப்பர். தொல்காப்பியர் ஊழைப் 'பாலறி தெய்வம் என்று குறிப்பிடுவர்". நாலடியாரில் சமண முனிவர், . பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் -தொல்லைப் பழவினையும் அன்னதகைத் தேதற்செய்த கிழவனை நாடிக் கொளற்கு ' 23. ஊழ் என்ற சொற்குப் பொருள் கூறும்போது. 24. தொல். பொருள். களவியல் நூற்.2 - 25. நாலடியார்-101 -