பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 84 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் மாயாமலமும் உயிர்கட்கு உளவாயின. அதனால் கன்மமும் மாயையும் ஆகந்துக மலம்' என வழங்கப்பெறும். ஆகந்துகம்-பின்பு வருவது எனவே ஆணவ மலம் நீங்குங் காலத்து இவையும் ஒருங்கே நீங்குவனவாம். ஆணவமலம் அறிவிற்கு மறுதலையாய் உயிர்களை நேரே தடை செய்து நிற்றலால் அது பிரதி பந்தம்' என்ற பெயரால் வழங்கி வருகின்றது. கன்ம மலம் ஆணவ. பந்தத்தின் பயனை உயிர்கட்கு உறுவித்து நிற்றலால் அஃது 'அநுபந்தம் என்ற பெயரைப் பெறுகின்றது. மாயாமலம் கன்மத்தால் தொடர்பு படுத்தப்பெற்று நிற்றலால் அது 'சம்மந்தம் என்று கூறப்பெறுகின்றது. மூன்றும் அநாதி, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அநாதியாக உள்ளவை. ஆணவபந்தம் உயிர்களை மேல் நோக்கி எழாது கீழ்நோக்கி அழுத்துதலால், உயிர்கள் தமக்கு மேலான இறைவனை அறியாது, கீழான கன்மத்தையே நோக்கும். அதனால் அவற்றிற்குப் பொதுவகை யாய் நிற்கும் மூலகன்மம் (முதல்வினை) உளதாகும். கன்மம் மாயையே பற்றி நிற்றலின், கன்மத்தின்வழி மாயை உயிர்களை வந்து பற்றும் இம்மூன்றிற்கும் இடையீடு இன்மையால் மும்மலங்களும் ஆன்மாவிற்கு அநாதியே உள்ளனவாம் என்பது அறியப்படும். அதன்பின் கன்மம் முன்பு வந்ததா? மாயை முன்பு வந்ததா? என்னும் வினாக்கள் ஒருவகையில் வேண்டாதவையாகின்றன. ஏனெனில், உயிர்கள் இயற்கையில் தூய்மையாக இருப்பின் அவ்வினாக்கள் பொருந்தும். கன்மம் மாயைகட்கு ஏதுவாக உள்ள ஆணவம் உயிர்கட்கு இயற்கையில் இருத்தலால் அஃது ஏதுவாக வரும் கன்மம் மாயைகளும் அன்றே உளவாம் என்பது கொள்ளப்படும்.