பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் . 3 (பாசம்} #87 என்று நூல்களில் குறிப்பிடப் பெறுவன எல்லாம் இந்தத் துல உடம்பில் அமைவதோடன்றிச் சூக்கும உடம்பில் அமைவ தன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உயிர்கள் சூக்கும உடம்பைக் கொண்டு நினைப்பவற்றைத் தூல உடம்பு கொண்டு செய்து நல்வினை தீவினைகளை ஈட்டும். அவற்றின் பயனாகிய இன்பதுன்பங்களை - சுகதுக்கங்களை - உயிர்கள் அநுபவிக்கும். மணிவாசகப்பெருமான், புல்லாய்ப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்து" என்று கூறியவாறு பலவகைப் பிறப்புகளில் மாறிமாறிப் பிறந் தும் இறந்தும் உழலும். அறம், மறம் என்று அருந்தமிழிலும், 'புண்ணியம், பாவம்' என்று வடமொழியிலும் சொல்லப் படுவன இச்சூக்கும கன்மங்களையே என்பதை நாம் அறிதல் வேண்டும். நல்வினை இன்பத்தையும், தீவினை துன்பத்தையும் தரும் என்பதையும் உணர்தல் வேண்டும். எனவே, கன்மமே - வினையே - பிறவிக்கும் அதன்கண் உண்டாகும் இன்ப துன்பங்கட்கும் காரணமாதல் வெளிப்படை என்பது உளங்கொள்ளப்படும். - o - மூலகன்மம். ஆணவத்தோடொப்பு அநாதியாகச் சொல்லப்படும் கன்மம் மூலகன்மம் என்பதாகும். இதனை விளக்குவோம். (1) உயிர்கள் யாவும் தாம் அடைகின்ற இன்பதுன்பங் களுக்கு அவை முற்பிறப்பில் செய்த வினை பல இடங்களில் 30. திருவா. சிவபுரா, அடி (26.31)