பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 197 விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்." தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று' என்றாற்போன்ற அறவுரைகள் பலவும் இக்கருத்துபற்றியே எழுந்தனவாகும். இவ்வாற்றால் நன்னெறி இது தீ நெறி இது' என்பதனைக் கல்வி கேள்விகளால் நன்குணர்ந்து, தீநெறியில் செல்லாது, நன்னெறியில் செல்வோரே உண்மை மக்களாவர்; அவ்வாறில்லாமல் மனம் போனவாறே போய் ஒழுகுவோர் மக்களாய்ப் பிறந்தும் மக்களல்லராய், விலங்கு முதலிய பிறவற்றோடு ஒப்பராவர். (5) கன்மங்களின் மூவகை நிலை நல்லனவும் தீயனவுமாக செய்யப்பெறும் கன்மங்கள் ஆகாமியம் என்ற பெயரால் வழங்கும். பின் அவை சூக்கும மாய் மறைந்து நிலைபெற்று நிற்கும்பொழுது சஞ்சிதம்' என்ற பெயரைப் பெறும்." இச்சூக்கும கன்மங்கள் பின்னர் இன்பதுன்பங்களாய் வந்து பயன்தரும் பொழுது பிராரத்தம்' என்ற திருநாமம் பெறும். இந்த மூவகை நிலைபற்றி ஈண்டு விளக்குவோம். ஈண்டு கன்மம் என்ற சொல்லுக்குப் பதிலாக 'வினை என்ற சொல் கையாளப் பெறுகின்றது. 40. குறள்-410(கல்லாமை) 41. குறள்-236 (புகழ்) 42. ஆகாமியம் எதிர்வினை, வருவினை மேல்வினை என்ற பெயர்களாலும், சஞ்சிதம்-அபூர்வம், பழவினை, தொல்வினை, கிடைவினை என்ற பெயர்களாலும், பிராரத்தம்-ஊழ்வினை, நுகர்வினை என்ற பெயர்களாலும் வழங்கப்பெறும்.