பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் மேலைக்கு வித்து மாகி விளைந்தவை யுணவு மாகி ஞாலத்து வருமா போல நாம்செயும் வினைக ளெல்லாம் ஏலத்தான் பலமாய்ச் செய்யும் இதம்அகி தங்கட் கெல்லாம் மூலத்த தாகி என்றும் வந்திடும் முறைமை யோடே." என்ற பாடலால் விளக்குவர். ஓர் உழவன் செய்த பயிர் தன் பயனைக் கொடுக்குங் காலத்தில் அஃது அவனுக்கு உண வாய்ப் பயன்படுதலேயன்றி அடுத்த ஆண்டிற்கு விதையாக வும் அமைகின்றதல்லவா? இந்த உவமை கொண்டு நாசோற் பத்திக் கருத்தைத் தெளியலாம். வினை இவ்வாறு நாசோற்பத்தி வருமாயின் உயிர் வினையினின்றும் நீங்குவதற்கு வழியே இல்லையா? என்ற வினா எழுகின்றது. ஆகாமியம் இல்லாமல் பிராரத்தத்தை அநுபவித்தல் இயலாது. இஃது உண்மையே யாயினும், அஃதின்றியும் பிராரத்தத்தை அநுபவித்தல் கூடும். அஃது எங்ங்னமெனில், பிராரத்தத்தை அநுபவித்தற்பொருட்டு நிகழும் முயற்சி விருப்பு வெறுப்புகளோடு கூடி நிகழும் பொழுதே ஆகாமியம்' எனப் பெய பெற்று அடுத்த பிறவிக்கு வித்தாய் அமையும். இல்லையேல் அவ்வாறு ஆகாமியமாதல் இல்லை. இதனை மேலும் தெளிவாக்குதல் வேண்டும். பிராரத்த வினை நன்மையையோ தீமையையோ தரும் பொழுது தானே நேரில் வந்து தருவதில்லை. "அஃது ஆதியான்மிகம் ஆதிபெளதிகம், ஆதிதைவிகம் ஆகிய மூவகை வாயிலா கவே பயன்தரும்” என்று முன்னர்க் குறிப்பிட்டதனை நினைவு 51. சித்தியார்-2.12