பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) - 205 கூரலாம். அங்ங்னம் தரும்பொழுது அந்நன்மை தீமைகளை "முற்பிறப்பில் நாம் செய்த வினையின் பயன்களே இவை' என்று கருதுதல் வேண்டும். அவ்வினைகள் தம் பயனைத் தருதற்கு வாயிலாகக் கொண்டவைகளே இம்முன்னிலைப் பொருள்கள் என்றும் உணர்தல் வேண்டும். இங்ங்னம் உணராமல் அப்பயன்கள் அப்பொழுதுதான் புதியனவாய் வருதல்போல் கருதித் தம்மையும் பிறரையும் அந்நன்மை தீமைகளுக்குக் காரணங்களாக வைத்து எண்ணுதல் தவறு; பெருந்தவறு. இஃது எய்தவன் இருக்க அம்பை நோவது போன்றதாகும். இம்முறையில் விருப்பு வெறுப்புகள் கொண்டு நட்பையோ பகைமையையோ கொள்ளும் முறையில் முயற்சிகள் நிகழுமாயின் அவை ஆகாமியம் என்னும் வினையால் மேலும் மேலும் வரும் பிறவிகட்கு வித்தாகும். இங்ங்னம் கருதாமல் இவை முன் செய்த வினைப்பயன்கள், இவற்றிற்கு முன்னிலையாக நிற்பவர்கள் அவ்வினைப் பயன்கள் விளைவதற்கு வாயில்களே நாம் செய்த வினையை நாம் அநுபவிக்கின்றோம்; அநுபவித்தேயாக வேண்டும்; எய்தவன் இருக்க அம்பை நோவதால் பயன் என்ன?’ என்று எந்தவித விருப்பு வெறுப்புமின்றி அமைவோமாயின், பிராரத் தம் உயிரைத் தாக்காது உடலளவாய் கழியும். இந்நிலையில் வினை நாசோற்பத்தி யாதல் இல்லை. ஆகவே, உயிர்கட்கு இவற்றால் வினைத் தொடர்பு நீங்குதலும் உண்டு என்று தெளியலாம். - வினையைக் கூட்டுவிப்பவன் இறைவன். இதனை மணிவாசகப் பெருமான், முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான் பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்-தென்னன் -