பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 209 மூவுலகம்: உயிர்களின் ஆணவப்பிணிப்பு மூன்று வகையாக இருத்தலால், உயிர்கள் மூன்றுவகையானவாறு இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆதலால் அவற்றின் பொருட்டு அமைந்த உலகமும் மூன்று வகையினவாக அமைந்துள்ளது. அவை தூய உலகம், கலப்பு உலகம், மாசுலகம் என்பனவாகும். அவை முறையே சுத்தப் பிரபஞ்சம், மிச்சிரப் பிரபஞ்சம், அசுத்தப் பிரபஞ்சம்' எனப்படும். மயக்கம் தாராதொழிதல், மயக்கத்தைத் தருதல் என்பது பற்றியே சுத்தம், அசுத்தம் என்ற சொற்கள் கையாளப் பெறுகின்றன. ஆகவே, சுத்தப் பிரபஞ்சம் மயக்கத்தைத் தாராது; அசுத்தப் பிரபஞ்சம் மயக்கத்தைத் தரும் என்பது தெளிவாகப் புலனாகும். மூவுலகம்' என்பது சித்தாந்தத்தில் கொள்ளப்படும் உண்மைப்பொருள் இங்ங்னம் கூறப்பெறும் மூவகை உலகங்களையேயாகும் என்பதைக் கருத்தில் இருத்துதல் வேண்டும். மும்மாயை. காரியமாய் உள்ள உலகம் இவ்வாறு மூவகைப்பட்டிருத்தலால் இவற்றிற்குக் காரணமான மாயையும் மூவகைப் பட்டிற்கும் என்பது தெளிவு. இவ்வாறு மூன்றாகக் கூறுபட்டு நிற்கும் மாயை மூன்றும் முறையே சுத்தமாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என்ற பெயர்களால் வழங்கப் பெறும். இவை மூன்றும் மும்மாயை' ஆகும். பிரகிருதிமாயையை மூலப் பிரகிருதி’ என்று வழங்குவர். மாயை - விளக்கம்: மாயை' என்றால் என்ன? உலகில் பலவகையாகக் காணப்படும் பொருள்களாய்ப் பரிணமிக்கக் கூடிய பலவகைச் சக்திகளின் தொகுதியே ‘மாயை' எனப்படுவது. இச்சக்திகள் உயிர்களைப் பற்றுமிடத்து அவ்வுயிர்களிடத்து இயற்கையாகவுள்ள ஆணவப்பிணிப் பினால் சுத்தமும் மிச்சிரமும் அசுத்தமாகிவிடும். எனவே, மாயை சுத்தமாய் இருந்து மயக்கத்தைத் தாராதொழிவதற்கும்