பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) . 2 #3 சுத்தமாயை, மாயை' எனப்படாமல் விந்து எனப்படுத லின் அதன் காரியங்கள் வைந்தவம்’ எனப்படும். அசுத்த மாயையே மாயை' எனப்படுதலின், அதன் காரியங்கள் "மாயேயம் எனப்படும். பிரகிருதி மாயையின் காரியங்கள் ‘பிராகிருதம்’ எனப்படும். இவற்றினின்றும் தத்துவங்கள் தோன்றும். (7) காரணங்களிலிருந்து காரியங்கள் தத்துவங்களின் தோற்றம் பற்றி விளக்குவதற்கு முன்னர் காரணங்களினின்றும் காரியங்கள் தோன்றும் முறையை அறிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. அதனைக் காண்போம். ஒரு பெரிய வட்டரங்கு நிறுவனத்தார் (Circus Company) ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்குச் சென்று வட்டரங்கு அமைக்க என்ன செய்கின்றனர்? மிகப் பெரிய துணியைக் கொண்டு கூடாரம் அமைக்கின்றனர். எனவே கொட்டகைக்குத் துணி காரணாமாகின்றது. துணியாகிய காரணம் எப்படி வீடாய்க் காளியப்பட்டது? முன்பு யானையின் மீதும் வண்டிகளின் மீதும் ஏற்றப்பட்டு மூட்டையாய் ஒடுங்கிக் கிடந்து துணிகள் பின்பு, விரிந்து பெரிய மாளிகை போன்ற கொட்டகையாய்க் காட்சி யளிக்கின்றன. இவ்வாறு சுருங்கியிருந்த காரணப்பொருள் விரிந்து நின்று காரியமாதலை விருத்தி என்ற பெயரால் வழங்குவர். இதற்கு படம் குடிலானாற்போல என்று எடுத்துக் காட்டு தருவர். படம்-துணி, குடில் - குடிசை. மண் பானையாதல், பொன் அணியாதல், பால் தயிராதல், நெல் பொரியாதல், மரங்கள் இருக்கையாதல் போன்று உருமாறுதல் பரிணாமம் என்ற பெயர்பெறும். இவ்வாறன்றி