பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் நூல் ஆடையாதல், மலர் மாலையாதல் போல்வன ஆரம்பம் எனப்படும். ஏனெனில் நூல்களையோ மலர்களையோ ஒருவழியாகக் குவித்துவிட்டால் ஆடையும் மாலையும் ஆகி விடமாட்டா. ஒவ்வொன்றாக எடுத்து ஒன்றன்பின் ஒன்றாக முறையே வைத்து இணைத்தால்தான் ஆடை உருவாகும்; மாலையும் உண்டாகும். ஆகவே இங்கு 'ஒன்று, இரண்டு, மூன்று... என்று தொடங்கி முறையே தொடர்ந்து காரியப் படுதலால் இஃது ஆரம்பம்’ என்று திருநாமம் பெறுகின்றது. இனி, நெல் பொரியாதல் எள் குவியலாதல் போல்வன. ‘சமுதாயம் என்ற பெயரால் வழங்கும். சமுதாயம் - கூட்டம். இவை மேற்குறிப்பிட்டவை போல் ஒன்று, இரண்டு, மூன்று. என்று ஒன்றன்பின் ஒன்று என்ற முறையில் தொடராமல் பல ஒருங்கு திரண்டு காரியம் ஆகின்றன. அதனால் இக்காரியப்பாடு ஆரம்பம் அன்று. இங்ங்னம் ஆரம்பத்திற் கும் சமுதாயத்திற்கும் வேறுபாடு காண்க. இனி, இப்பி வெள்ளியாதல், கயிறு பாம்பாதல் போல்வன உண்மையில் காரணம் காரியமாக மாறுவன அல்ல; காண்போனுக்கு உள்ள மயக்கம் காரணமாக அவை வெறுந்தோற்றம் மாத்திரத்தில் அவ்வாறு காட்சியளிக்கின்றன. அதனால் இவை போல்வன விவர்த்தனம்’ எனப்படும். விவர்த்தனம் - வேறு நிகழ்ச்சி. மேற்கூறியவற்றுள் ஒரு சிலவற்றை மேற்கொண்டு பிறசமயங்கள் உலகத்தின் காரியப்பாட்டை ஒவ்வொரு விதமாக விளக்கும். அவை ஈண்டு காட்டப்பெறவில்லை. சைவ சித்தாந்தம் சுத்த மாயையின் காரியம் விருத்தி என்றும், அசுத்தமாயையின் காரியம் பரிணாமம் என்றும் கூறும். பால் தயிராதல் பூரண பரிணாமம். வெண்ணெய் திரளுதல், சாணம்