பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் தங்கள் நூல்களாலும், உபதேசங்களாலும் எங்கும் சித்தாந்தத் தினை விளங்கச் செய்தனர். இவ்வாறு மெய்கண்டார் சந்தா னம் அன்று தொட்டு இன்றுவரை தமிழ்நாட்டில் சிறந்தோங்கி நிற்கின்றது. இக்காரணங்களால் மெய்கண்டதேவரைச் சித்தாந் தத்தின் முதல் ஆசிரியராகக் கருதுவர் சிலர். இங்ங்ணம் கருது வதற்குரிய பெருமையுடையவர் இப்பெருந்தகை என்பதில் எள்ளளவேனும் ஐயம் இல்லை. ஆயினும் சித்தாந்தத்தினை இவரே படைத்தார் என்று கருதுவது சரியன்று. மெய்கண்டா ருக்கு முன்னரே திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்ற இரண்டு சித்தாந்த நூல்கள் உள்ளன; மற்றும் ஞானாமிர்தம் முதலியனவும், சித்தாந்த சாராவளி, அட்டப் பிரகரணம் முதலிய வடநூல்களும் இருந்தமை அறியக் கிடக் கின்றது. ஆகவே பரந்து கிடந்த சித்தாந்தப் பொருள்களை ஒரு கோவைப்பட அளவை முறையால் நூல் முறைப்படிச் செய்தருளினவர் மெய்கண்டார்" என்பதை நாம் ஒப்புக் கொண்டேயாக வேண்டும். இதனால் இது சித்தாந்த முதல் நூல் என்று போற்றப் பெறுகின்றது. இதன் பெருமையைத் 'திருக்குறள் ஆகிய வேதம் பசு திருமூலர் திருமந்திரம் ஆகிய ஆகமம் அந்தப் பசுவின்பால்; அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் நால்வரின் பாடல்களாகிய திருமுறைகள் அப் பாலின் நறுநெய், மெய்கண்டார் இயற்றிய சிவஞானபோதம் அந்நெய்யின் இனிய சுவையாகும்" என்று பெரியோர்கள் பாராட்டியுள்ளனர். இெராமாநுசர் வைணவ நெறியை முறைப்படுத்தினமை ஈண்டு நினைத்தல் தகும். 6. கீதையில் தியான சுலோகங்களின் கருத்தையொட்டி இக்கருத்தையுடைய வெண்பா அமைந்துள்ளதாகக் கருத இடம் உண்டு.