பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள்-3 (பாசம்) - 217 (ஆ) பைசந்தி வாக்கு மேற்குறிப்பிட்ட சூக்குமை வாக்கு பின் மேலும் விருத்திப்பட்டு பைசந்தி வாக்காகும். அதாவது, சொல்வடிவம் சிறப்பு வகையில் விளங்காது பொதுவகையில் விளங்கி நிற்கும் நிலையாகும் இது. பைசந்தி என்பது பஸ்யந்தி’ என்ற சொல் வடிவம் திரிந்தநிலை. இதற்கு விளங்குவது என்பது பொருளாகும். சூக்குமை வாக்குபோல் முற்றிலும் விளங்காது நிற்றல் இன்றி, ஒருவாறு விளங்கி நிற்பதால் இதற்கு ‘பைசந்தி என்று பெயர் வந்தது. இது விளங்கியும் விளங்காதும் நிற்பதற்கு மயில் முட்டையிலுள்ள நீரினை உவமை கூறுவர். மயில் முட்டையிலுள்ள நீரில் மயிலினிடத்துள்ள ஐவகை நிறங்களும் தோன்றியும் தோன்றாதும் நிற்கும். சூக்குமை', 'பைசந்தி’ என்ற இருவகை வாக்கிலும் மொழிவேறுபாடு இல்லை. (இ) மத்திமை வாக்கு: பைசந்தி என்னும் நிலையில் இருந்த வாக்கு சொல் வடிவில் இனிது விளங்கித் தோன்றி, அதன்பின் எழுத்து வடிவில் நன்கு விளங்கித் தோன்றி, அதனை அவ்வாறே சொல்ல எழும் முயற்சியைப் பெற்று 'உதானன் என்னும் காற்றால் உந்தப்பட்டு மிடற்றளவில் (கண்டத்தளவில்) மெல்ல ஒலித்து நிற்பது மத்திமை வாக்காகும். பைசந்திக்கும் வைகரிக்கும் இடைநிற்றல்பற்றி இது மத்திமை' என்ற பெயர் பெற்றது. (ஈ) வைகரி வாக்கு 'உதானன் என்னும் காற்றால் உந்தப்பட்டு மிடற்றளவில் நின்ற சொற்கள் பிராணன் என்னும் காற்றால் நன்கு வெளிப்படுத்தப்பெற்றுச் சொல்லு வோன் செவிக்கும் கேட்போன் செவிக்கும் புலனாவது வைகரி வாக்காகும். இது சொல்லுவோர் செவிக்கு மட்டும் புலனாகி நின்ற அளவில் நிற்பின் சூக்கும வைகரி என்றும், கேட்போர் செவிக்கும் புலனாகின் துல வைகரி என்றும் வழங்கப்பெறும். இது பல், இதழ், நா, அண்ணம், மூக்கு