பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் இன்னும், போகமல வாசனையுடையோராய் சதாசிவ மூர்த்தியது சாலோக்கியம், சாமீப்பியம் சாரூப்பியம் என்பவற்றைப் பெற்று அணு சதாசிவர் என்னும் பெயருடன் சுத்த போகத்தை அநுபவித்திருப்போர் பலர். இவர்கட்கெல்லாம் இடம் இச்சதாசிவ தத்துவமேயாகும். இவ்வாறே, துல இலயமலவாசனையுடையவர் சத்தி தத்துவத் தையும், சூக்கும இலயவாசனையுடையோர் சிவதத்துவத்தை யும் அடைந்து அங்குள்ள போகத்தை அநுபவித்திருப்பர். இவர்கட்கு இந்த இரு தத்துவங்களும் இடங்களாக அடையும். ஆகவே, சிவதத்துவம் முதலிய ஐந்து தத்துவங்களிலும் புவனங்கள் உள்ளன என்பது தெளிவாகும். இப்புவனங்கள் முறையே பத்து, ஐந்து, ஒன்று, எட்டு, ஒன்பது எனச் சிவாகமங்கள் வரையறுத்துப் பேசும். மேலும், இச்சுத்த தத்துவம் காலதத்துவத்தைக் கடந்து நிற்கும்." இதனால் நித்தியம் (தோற்றக் கேடுகள் இல்லாதவை) என்று கூறப்பெறும். எனினும் காரியங்கள் யாவும் அநித்திய மாதலால் இவ்வாறு கூறுவது உபசாரமே என்பது அறியப்படும். ‘சுத்த தத்துவம் சிவன்றன் சுதந்திர வடிமாகும் என்று சிவஞானசித்தியார் கூறுவதை அடியொற்றி சுத்தமாயையை இறைவனது திருமேனியாகக் கொள்வர் சிலர். இக்கொள்கை அந்நூலுள் காயமோ மாயையன்று, காண்பது சக்தி தன்னால் என்பது போன்ற பலவற்றோடு முரனுமாதலால், இறைவனுக்கு அவனது சக்தியின்றிப் பிறிதொன்று வடிவ மாகாது என்பது கருத்தில் இருத்தப்படும். அதிட்டானம்' 61. சாலோக்கியம் - இறைவன் உலகில் இருக்கும் நிலை; சாமிப்பியம் - இறைவன் அருகில் இருக்கும் நிலை; சாருப்பியம் - இறைவனுடைய உருவம் பெயர் முதலிய வற்றைப் பெற்றிருக்கும் நிலை. 62. சுத்த தத்துவத்தாலான பரமபதத்தை வைணவம் காலம் நடையாடாத தேசம் என்று வருணிக்கும்.