பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் ஒருவர் தாம் செய்த வினையின் பயனையன்றிப் பிறர் செய்த வினையின் பயனை நுகரவொட்டாமலும், தாம் செய்த வினையின் பயனைப் பிறர் நுகராது ஒழியவொட்டாமலும், தாம் செய்த வினையின் பயனைத் தாமே நுகருமாறும் அவற்றில் நியமித்து நிறுத்தும். இத்தத்துவம் இல்லையாயின், ஒருவர் தாம் செய்த தீவினையின் பயனைத் தாம் நுகராது ஒழிதலும், பிறர்செய்த நல்வினைப் பயனைத் தாம் நுகர்தலும் கூடுவனவாக அமைந்து விடும். அவரவர் செய்த வினையின் பயனை அவரவரே நுகர்தல் என்னும் நியதி இல்லையாய் விடும். இன்னும் விளங்கக் கூறினால், இறைவனது சக்தி கன்மத்தை வரையறுக்கும் செயலுக்கு இந்நியதி தத்துவம் ஒரு கருவியாக நிற்கும் என்பதாகும். - (இ) கலை. இஃது ஆன்மாவிற்கு உள்ள ஞானம், இச்சை, கிரியா சக்திகளுள் கிரியை சத்தியை விளக்கி, அதனைத் தொழிற்படச் செய்யும். கலித்தல் என்பதற்கு 'நீக்குதல் எழுப்புதல் என்னும் பொருள்கள் உளவாதல் அறியப்படும். ஆணவமலத்தைச் சிறிதேநீக்குதல் என்பதற்கு ஆன்மாவின் கன்மநிலைக்கு ஏற்ப நீக்குதல் என்பது பொருளாகும். எனவே, ஆன்மா கிரியா சத்தி விளக்கப்பெற்ற பின்னரே யாதொரு செயலையும் செய்வோனாந்தன்மையை” (கர்த்திருத்துவம்) எய்தி நிற்கும் என்பது தெளிவுறுதல் S5「@TGa)伴LD。 (ஈ) வித்தை இது மாயையினின்றும் தோன்றாமல், கலையிலிருந்து தோன்றும் என்பதை நினைவுகூரலாம். ஞானசக்தி கலையினால் எழுப்பப்பெறும் கிரியை சக்தியின் .ே றாகாது அதன் ஒருகூறேயாதலின் அதனை எழுப்பும் தத்துவமும் கிரியா சக்தியை எழுப்பும் கலையின் ஒரு கூறாய் அதனினின்றே தோன்றும் என்பது அறியப்படும். இஃது ஆணவ மலத்தைச் சிறிதே நீக்கி ஆன்மாவின் விஞ்ஞான