பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 23 வித்தியாதத்துவம் ஏழனுள் காலதத்துவத்தில் இரண்டு புவனங்களும், நியதி தத்துவத்தில் ஐந்து புவன்ங்களும் கலாதத்துவத்தில் இரண்டு புவனங்களும், வித்தியாதத்துவத் தில் இரண்டு புவனங்களும், அராக தத்துவத்தில் ஐந்து புவனங்களும், புருட தத்துவத்தில் ஆறு புவனங்களும், மாயாதத்துவத்தில் ஐந்து புவனங்களும் உள்ளன என்று சைவ ஆகமங்கள் கூறும், இங்குப் புருடதத்துவம் என்பது அதற்குக் காரணமான மூலப்பிரகிருயை. (10) ஆன்ம தத்துவங்கள் வித்தியா தத்துவங்கள் ஏழினும் ஆன்மாவின் கிரியை சத்தியை எழுப்புவதாகக் கூறப்பெற்ற கலை’ என்ற தத்துவத்தினின்றும் வித்தை’ என்ற தத்துவமும், அதினின்றும் 'அராகம்’ என்னும் தத்துவமும் தோன்றும் எனக் கூறப் பெற்றன. அவற்றின் பின்னர்க் கலையினின்றும் நேரே 'மூலப்பிரகிருதி தோன்றும். இதுவே ஆன்ம தத்துவங்கள் அனைத்திற்கும் மூலகாரணமாகும். இதனால் இதுவும் ஒரு மாயையாகச் சொல்லப்பெறுகின்றது. எனினும் இது காரணமாய் நில்லாது, கலை’ என்னும் தத்துவத்தின் காரியமாய் நிற்றலின், காரணமாயைகள் சுத்தமாயை, அசுத்தமாயை என்னும் இரண்டுமேயாகும். மூலப்பிரகிருதி மான் என்ற பெயராலும் வழங்கப்பெறும்’ () மூலப்பிரகிருதி மூலப்பிரகிருதியை இறைவன் அனந்ததேவர் வழி சீகண்டருத்திரர் வாயிலாகத் தொழிற்படுத்துவன். சீகண்டருத் திரர் சகல வர்க்கத்தினராகிய ஆன்மாக்களுக்குத் தலைவர். 63. மான் என்பது மகத்து' என்ற வடசொல்லின் திரிபு