பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் . 3 (பாசம்) 235 இது காரணமாய் அமைகின்றது. அங்ங்னம் அமையுமிடத்து இது சாத்துவிகக்கூறு, இராசதக் கூறு, தாமதக் கூறு என முக்குணங்களின் மூன்று கூறாய் நின்று, சாத்துவிகக்கூறு ‘தைசதாகங்காரம் என்றும், இராச்தக்கூறு வைகாரி அகங் காரம் என்றும், தாமதக்கூறு பூதாதி அகங்காரம்' என்றும் பெயர்களைப் பெறும். - (ஈ) மனம்: இந்த அந்தக்கரணம் தைசதா கங்காரம் என்பதினின்று தோன்றும். இது புறக்கருவிகளாகிய மெய், வாய், கண், மூக்கு செவி என்ற ஐம்பொறிகளால் கவரப்பெற்ற ஊறு, சுவை, உருவம், நாற்றம், ஓசை’ என்னும் புலன்களை" ஆன்மா பற்றுதற்கும், பின் புத்தி தத்துவத்தால் அறியப்பட்ட பொருளின் பெயர், சாதி, குணம், கன்மம், உடைமை என்பவற்றின் நினைவு மனத்தின்கண் தங்கிக் கிடப்பதால், அப்ப்ொருளேயாயினும், அதனோடு ஒருங்கொத்த அவ் வின்பப் பொருளாயினும் மீளவும் புறக்கருவிகட்குப் புலனாகும் பொழுது, இஃது இன்னபொருள் போலும் எனப் பொதுவாக, நினைத்தல் சங்கற்பம்’ என்றும், அஃது ஆமோ? அன்றோ? எனக் கவர்ந்து நிற்றல் விகற்பம் என்றும் வழங்கப்பெறும். இவற்றுள் பின்னதே ஐயம் என்றாலும், முன்னதும் ஐயத்தின் பாற்பட்டதேயாகும். ஆகவே, சங்கற்பவிகற்பங்களால் ஐயுற்று நிற்கும் கருவி மனமே என்பதும், மனம் இங்ங்னம் பற்றி நின்று ஐயுற்ற பொருளைப் புத்தி இன்னதெனத் துணியும் என்பதும் ஈண்டு நாம் அறிந்து தெளிய வேண்டியவை. இன்னோர் உண்மை. இதனை நாம் உளங்கொள்ளல் வேண்டும். முன்னர் அறியப்பட்ட பொருளே பின்னர் காணி நேரிடுங்கால், முன்னர் ஐயம் தோன்றிப் பின்னர்த் துணிவு 66. வட மொழியில் பரிசம், ரசம், ரூபம், கந்தம், சத்தம் எனப்படும். - qa 67. புலன்களை வடமொழியில் விஷயங்கள்’ என்று வழங்குவர்