பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 3 (பாசம்) 239 தேயு, அப்பு, பிருதிவி என்னும் முறையில் அமையும். பூதங்கள் ஐந்தும், அவற்றின் செயல்களும் ஒருவாற்றாற் புலனாவன. ஆதலின் அவை துலப்பொருள்கள் என்பது தெளிவு. சூக்குமமாகிய காரணத்தினின்றும் துலமாகிய காரியம் தோன்றுங்கால் நேரே தூலமாய்த் தோன்றாது. முதற்கண் ஒருவாற்றாற் சூக்குமமும், ஒருவாற்றாற் துலமுமாய நிலையில் தோன்றி அதன் பின்னரே துலமாய்த் தோன்றுவதாகும். துலமாகிய ஆகாயம் முதலிய பூதங்கள் ஐந்தும் பூதாதியகங் காரத்தினின்றும் நேரே அங்ங்னம் தோன்றாமல் முதற்கண் தந்மாத்திரைவடிவில் தோன்றிய பின்னரே பூதவடிவில் தோன்றுவனவாகும். பூதங்களின் சூக்குமநிலையே தந்மாத் திரையாதல்பற்றி அவை சூக்கும பூதம் எனவும் வழங்கும். அதனால் பூதங்களைத் துல பூதம் எனவும், மகா பூதம்’ எனவும் வழங்குவர். எனினும் பூதம் என்பது துலநிலைக்கே உரிய பெயராதல் அறியப்படும். சூக்கும பூதங்கள் தந்மாத்தி ரைகள் என்றே கூறப்பெறும். முக்கிய ஒன்று: பூதங்கட்கு முதற்காரணமாய்ச் சூக்கும நிலையில் நிற்கும் இத் தந்மாத்திரைகளின்பெயரே, பூதங்களின் குணமாய்ச் செவி முதலிய ஞானேந்திரியங்கட்குப் புலனாகும் ஐம்புலன்கள் (அல்லது விடயங்கட்குப்) பெயராய் நிற்கும். அதனால் அவ்விரண்டையும் ஒன்றே என மயங்காது வேறு வேறு என்று உணர்ந்து தெளியப்படும். சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் ஆகிய தந்மாத்திரைகள் ஐந்தும் முறையே தண்டமிழில் ஒசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என வழங்கப்படும். பெயர்விளக்கம்: இனி, தந்மாத்திரை’ என்பதன் பொருளையும் அறிந்து கொள்ளல் மிகவும் இன்றியமையாதது. இதன் பொருள் அதனளவாய் நிற்றல் என்பது. அதாவது