பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் சிறப்பாகக் கூடி இரண்டு, மூன்று நான்கு ஐந்து என்னும் குணங்களையுடையனவாய் பரிச தந்மாத்திரை, உருவ தந்மாத் திரை, இரத தந்மாத்திரை, கந்த தந்மாத்திரை என்று பெயர் பெற்று நிற்கும். தத்துவங்கள் முப்பத்தாறும் தோன்றுங்காலத்து இம் முறையே தோன்றுதலின் ஒடுங்கும் காலத்திலும் இம்முறையே ஒடுங்குவனவாகும் என்பது அறியப்படும். இத்தோற்ற ஒடுக்கங்களை இறைவன் நேரேயும், பிறர் வாயிலாகவும் செய்விக்க நிகழ்வனவன்றித் தாமே நிகழமாட்டா என்பதும் கருத்தில் இருத்தப்படும். அவனன்றி ஓர் அணுவும் அசை யாது' என்று பொதுமக்கள் வாக்கில் நிலவும் பழமொழியின் உண்மையும் இத் தத்துவத்தை உணர்த்துவதை ஒர்ந்து உளங்கொள்ளலாம். வேதக் கருத்து: வேதத்துள் ஆன்மாவினின்றும் ஆகாயம் தோன்றிற்று ஆகாயத்தினின்றும் வாயு தோன்றிற்று வாயுவினின்றும் தேயு தோன்றிற்று தேயுவினின்றும் அப்பு தோன்றிற்று அப்புவினின்றும் பிருதிவி தோன்றிற்று என்று கூறப்பெற்றுள்ளது. தேவாரத்துள்ளும், இருநிலனது புனலிடைமடிதர,எரிபுக எரியதுமிகு பெருவளியினில் அவிதர,வளி கெடவியனிடை முழுவது கெட இருவர்களுடல் பொறையொடுதிரிஎழிலுருவுடை யவன் இனமலர் மருவியஅறுபதம்இசை முரல் மறைவனம்.அமர் தருபரமனே.” என வந்துள்ளது. இவ்வகையான் கூற்றுகள் யாவும் தத்துவத் தோற்ற ஒடுக்கங்களை நுண்ணிதாக எடுத்து விளக்கக் கருதாது, அவற்றைப் பொதுப்படக் குறித்து, இறைவனின் திருவருட் பெருமை ஒன்றையே வற்புறுத்திப் போதலைக் கருதினமையின், அவை தந்மாத்திரைக்கும் பூதங்கட்கும் ந்ைத்ர் தே.1.227