பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தாந்த சாத்திரங்கள் 9 மேலும், சித்தியார் அனைவரும் சித்தாந்தப் பொருளை உணருமாறு எளிமையாகவும், விரிவாகவும், சைவாகமப் பொருள்களை ஆங்காங்குத் தந்துரைத்து அவற்றிற்கு விளக்க மாகவும் அமைந்துள்ளது. இக்காரணங்களால் இதுவே சித்தாந்தப் பெருநூலாகத் திகழ்கின்றது. இதுபற்றியே "சிவத்திற்கு மேல் தெய்வம் இல்லை சித்திக்கு மேல் நூலும் இல்லை" என்ற ஒரு பழமொழியும் எழுந்தது போலும். தமிழ் நூல்கள் பலவற்றுள்ளும் சிறந்தவையாகச் சிலவற்றைக் கூறும், வள்ளுவர்நூல் அன்பர்மொழி வாசகம்தொல் காப்பியமே தெள்ளுபரி மேலழகன் செய்தஉரை-ஒள்ளியசீர்த் தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும் தண்டமிழின் மேலாந் தரம். என்ற வெண்பா சிவஞான சித்தியாரையே சாத்திரத்திற்குச் சிறந்ததாகக் காட்டுவதைக் காணலாம். 'ஆகமங்கெல்லாம் உரையாணி" என்ற புகழ் மாலையையும் சூட்டியிருப்பதாகக் கண்டு தெளியலாம். சித்தாந்தத்தைத் தெளிவாக அறிய விழை வோர், இந்த நூலை, குறிப்பாகச் சுபக்கத்தினை, ஓத வேண்டி யது மிகவும் இன்றியமையாதது. (5) இருபா இருபஃது. இதனை அருளியவரும் அருள் நந்தி தேவரேயாவார். இந்த நூலில் தாம் சிவஞான போதத்தால் உணர்ந்த சித்தாந்தப் பொருளினும் மிக நுண்ணிய பொருள் களைத் தம் குருநாதராகிய மெய்கண்ட தேவரை வினவி யறிந்தவற்றை விளக்கி உரைக்கின்றார். இந்த வினாக்களை 20 பாடல்களில் வெளிப்படையாகக் கூறி விடைகளைக் குறிப்பால்தான், பெற வைத்துள்ளார். இவற்றைச் சிந்தித்து அறிதல் வாசகர்களின் பொறுப்பு (6) உண்மைவிளக்கம்: இப்பனுவலை அருளிச் செய் தவர் திருவதிகை மனவாசகம் கடந்தார் என்பவர். இவரும்