பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) - 247 தேயு: இதற்கு வடிவம் முக்கோணம் நிறம் செம்மை; குறி சுவ(ஸ்த்தி எழுத்து ரகர மெய், அதி தேவர் உருத்திரன். வாயு: இதற்கு வடிவம் அறுகோணம் நிறம் கருமை: குறி ஆறு புள்ளி; எழுத்து யகர மெய்; அதி தேவர் மகேசுவரன். ஆகாயம். இதற்கு வடிவம் வட்டம் நிறம் புகைமை, குறி அமுதவிந்து ;ெ எழுத்து அகர உயிர் அதி தேவர் சதாசிவன். எழுத்துகள் வித்தெழுத்துகளாம் (பீஜாக்கரங்களாம்). ஆகவே அவை ஆ, ஈ, ஊ, ஐ, அ என்னும் உயிரெழுத்துக் களோடு கூட்டி உச்சரிக்கப்படும். இம்மெய்யெழுத்துகள் அனைத்திற்கும் முதலில் ஹகார மெய் சேர்க்கப்பெறும். (iv) பெயர்க்காரணம் சித்தாந்தத்தில் சில பெயர்களின் காரணம் ஈண்டு தரப் பெறுகின்றது. (அ) ஆன்மதத்துவம் என்பதில் ஆன்மா என்பது முன்னர்ச் சகல வர்க்கத்தினராகிய ஆன்மாக்களைக் குறித்துப் பின்னர் அவ்வான்மாக்கட்குத் தலைவராகிய சீகண்ட ருத்திரரைக் குறிக்கும். மூலப் பிரகிருதியிலிருந்து குணதத் துவம் முதலியவற்றைத் தோற்றி ஒடுக்குபவர் சீகண்ட உருத்திரராதல்பற்றி இவ்விருபத்து நான்கு தத்துவங்களும் 'ஆன்ம தத்துவங்கள் என்று பெயர் பெற்றன. (ஆ) அசுத்தமாயையிலிருந்து மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் என்னும் தத்துவங்களை