பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் மொழியப்படும். இது நிலவுலகிலுள்ள மக்கட்கேயன்றி, வானுலகிலுள்ள தேவர்க்கும், அவர்கட்குத் தலைவராகிய இந்திரன், அயன், மால் என்பவர்கட்கும் உள்ளது. எனவே, அவர்களும் பிராகிருதராகிய சகலரேயாவர். மேலும், மக்களே யன்றி தேவரையுள்ளிட்ட ஏனை அறுவகைப் பிறப்புகளும் பிராகிருதமேயன்றி, ஒன்றேனும் அப்பிராகிரதமன்று என்பது அறியப்படும். இதனால் அயன் மால் உள்ளிட்ட தேவர் முதலிய பலரும் முக்குணவயத்தராய் யான், எனது என்னும் செருக்கு களுற்று, இன்பம் துன்பம் மயக்கம் என்பவற்றுள் அழுந்தி, மலர்ச்சி, வாட்டம், மடி என்பவற்றையும், பொறுமை, பொறாமை, புறக்கணிப்பு முதலியவற்றையும் உடையவர்களா வர் என்பது பெறப்படும். இதுபற்றியே திருவள்ளுவரும், யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்(கு) உயர்ந்த உலகம் புகும்.' என ஞானம் பெற்றோரைத் தேவரினும் மேம்பட்டவர் எனக் கூறியதன் நுட்பமும் உணர்ந்து தெளியப்படும். (உ) ஒர் உண்மை தேவர்களேயன்றி, பிரமன், மால் உருத்திரன் ஆகியவர்கள் முக்குணமுடைய சகலரேயெனி னும், அவர்களுள் உருத்திரன் பக்குவம் எய்தினவன். இவன் சிவபெருமானை வழிபட்டு இப்பெருமானது உருவத்தையும் தொழிலையும் பெற்று நிற்பவன். அதனால் இவன் ஏனைய இருவரினும் மேம்பட்டு மயக்கமின்றி இருப்பான். இங்ங்னம் மூவரும் தேவரும் முதலாகவுள்ள சகல வர்க்கமாகிய ஆன்மாக்கட்கெல்லாம் சீகண்ட உருத்திரரே தலைவர். இவர் மூவருள் ஒருவனாகிய குணிருத்திரனைப் போலச் சகலராகாத வர். பிரளயாகலருள் பக்குவம் எய்திப் பரமசிவனை உணரும் ஞானத்தைப் பெற்று அப் பெருமானது திருவுளக் குறிப்பின் 76. குறள் 346 (துறவு)