பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் இடங்கள் பகுத்துக் கூறப்படும். எல்லாவற்றிலும் கீழ் உள்ளவை பிருதிவி தத்துவ அண்டங்கள். இவை ஆயிரங்கோடி’ என்றும், இவற்றுள் ஓர் அண்டத்தில் நாம் வாழ்கின்றோம்.' என்றும் சிவாகமங்கள் கூறுகின்றன. இந்த அண்டங்களைப் பற்றி மகாகவி பாரதியார், . நக்க பிரான் அருளால்-இங்கு நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்! தொக்கன அண்டங்கள்-வளர் தொகைபல கோடிபல் கோடிகளாம்! இக்கணக் கெவரறிவார்-புவி எத்தனை யுளதென்ப தியாரறிவார்.' என்றும் , விண்டு ரைக்க அறிய அரிதாய் விரிந்த வான வெளியென நின்றனை அண்ட கோடிகள் வானில் அமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை மண்ட லத்தை அணுவணு வாக்கினால் வருவ தெத்தனை அத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்த கோல மேநினைக் காளியென் றேத்துவேன்.' என்றும் கூறியுள்ள கருத்து ஈண்டு நினைத்தல் தகும். இவ்வண்டங்களுக்குப் பிரமாண்டம் என்பது பெயர் (பிரமம் - பெரியது). நாம் வாழும் பிரமாண்டம் நூறு கோடியோசனை உயரமுள்ளது. நடுப்பகுதியே பூமியின் பரப்பாகும். இது ’பூலோகம்’ எனப்படும். இதன் கீழே அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதலம் என்கின்ற ஏழு உலகங்கள் உள்ளன. இவற்றின்கீழே பாவிகள் சென்றடை யும் இருபத்தெட்டு கோடி நரகங்கள் உள்ளன. இவற்றின்கீழ் 78. பாகி கோமதி மகிமை செய்5 79. பா.க. பராசக்தி வாழ்த்து-1