பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் மேற்குறிப்பிட்ட மகாமேருமலையின் தென்பால் நிடதம், ஏமகூடம், இமயம்’ என்ற மூன்று மலைகள் உள்ளன. வடபால் நீலம், சுவேதம், சிருங்கவான்’ என்ற மூன்று மலைகள் உள்ளன. கிழக்கில் மாலியவான்’ என்னும் மலையும், தெற்கில் கந்த மாதனம்’ என்னும் மலையும் உள்ளன. இந்த மலைகளால் நாவலந்தீவு ஒன்பது கண்டங் களாகப் பகுக்கப்பெறுகின்றது. அவை இளாவிருத்தவருடம், பத்திராசுக வருடம், கே சுமால வருடம், அரி வருடம், கிம்புருவருடம், பாரதவருடம், இரம்பிய வருடம், இரணிய வருடம், குருவருடம் என்பனவாகும். இவற்றுள் நாம் வாழும் 'பாரத வருடம் என்னும் பரத கண்டம் உட்பட ஒன்பது கண்டங்களையும் மனு என்னும் அரசன் மக்கள் ஒன்பதின் மருக்கு உரியவாய் அவர்கள் பெயரால் வழங்கப்பெற்றன. நாம் வாழும் பரதகண்டமும் ஒன்பது கண்டங்களை யுடையது. இவற்றுள் தென்கடலைச் சார்ந்த பகுதி 'குமரிக் கண்டம்' என்று வழங்கப் பெறுகின்றது. பூலோகத்தில் பரத கண்டமே சிறந்தது என்றும், பரதகண்டத்திலும் குமரிக்கண் டமே சிறந்த தெய்வபூமி’ என்றும் சிவாகமங்கள் கூறுகின்றன. மேற்கூறப்பெற்ற பூலோகத்தின்மேல் புவலோகம், சுவலோகம், மகலோகம், சனலோகம், தவலோகம், சத்திய லோகம் என்னும் ஆறு உலகங்கள் உள்ளன. புவலோகம் சந்திராதித்தர் முதலியோர் இருப்பது. சுவலோகம் இந்திரன் முதலிய தேவர்கள் வாழ்வது. மகலோகம் மரீசி முதலிய முனிவர்கள் வாழ்வது. சனலோகம் பிதிரர் முதலியோர் வாழ்வது. தவலோகம் சனகர் முதலிய பெருந்தவத்தோர் வாழ்வது. சத்திய லோகம் நான்முகனுடையது. இதற்குமேல் திருமாலினது வைகுந்தமும், அதற்குமேல் குணிருத்தரருக் குரிய உருத்திரலோகமும் உள்ளன. பிருதிவி தத்துவத்திலுள்ள எல்லா அண்டங்களிலும் இவ்வாறே உலகங்கள் உள்ளன." 80. The Expanding universe - Sisirsp fists&so 2 5irstrø6. Gutsos