பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 26} (iii) வித்தியா கலை வித்தியாதத்துவம் ஏழும், இக் கலையுள் அடங்கும். மேற்கூறியவற்றிற்கு மேலுள்ள இருபது பதங்களும். ஏகாரம் முதல் கவ்வருக்கத்தின் நான்காவது எழுத்து ஈறாகவுள்ள ஏழு எழுத்துகளும் சிகை, அகோரம், என்ற இரண்டு மந்திரங்களும், புவனம் இருபத்தேழும் இதில் அடங்கி நிற்கும். இக்கலைக்குரிய வாக்கு மத்திமை ஆகும். (v) சாந்திகலை: சிவதத்துவம் ஐந்தில் சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம் என்ற மூன்றும், இதில் அடங்கி நிற்கும். மேற்கூறியவற்றிற்கு மேலுள்ள பதினொரு பதங்களும், சவருக்கத்தில் நான்காவது தவிர ஏனைய மூன்று வன்னங் களும், தத்புருடம், கவசம் என்ற இரண்டு மந்திரங்களும் இதில் அடங்கும். இக்கலைக்குரிய வாக்கு பைசந்தி. (v) சாந்தியதீதகலை: சிவதத்துவத்தில் எஞ்சிய சக்தி, சிவம் என்ற இரண்டு தத்துவங்கள் இதில் அடங்கும். மேற்சொல்லிய பதங்கள் போக எஞ்சிய ஓம்’ என்னும் ஒரு பதமும் ஐம்பத்தொரு வன்னங்களில் மேற்சொல்லியவை போக எஞ்சிய உயிரெழுத்து பதினாறும், ஈசானம், அத்திரம், மூலம் ஆகிய மூன்று மந்திரங்களும் இக்கலையில் அடங்கி நிற்கும். இக்கலைக்குரிய வாக்கு சூக்குமம் (நேத்திரத்திற்கு ஈடாக மூலம் உள்ளது). எனவே, சுத்தம், மிச்சிரம், அசுத்தம் என்னும் முத்திறப்பட்ட எல்லாப் பொருள்களும் இந்த ஐந்து கலைகளுள் அடங்குதலை அறிந்து தெளியப்படும். (இ) பஞ்சபூதங்கள். தத்துவங்கள் பலவற்றில் யாவர்க் கும் எளிதில் விளங்குவன பஞ்சபூதங்கள். இதனால்தான், நிலம்தி நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம்’ 82. தொல்-பொருள்-91